இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, March 15, 2011

முப்பரிமாணக் காம வலை

பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்...
மார்ச் 15,2011 தினமலர்
இந்திய சமூக அமைப்பின் ஆரம்ப காலம் முதலே ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும், பெண்கள் அடங்கிப் போகக்கூடிய பலவீனமானவர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஆணாதிக்க போக்கு காரணமாக குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பெண்களையும், அவர்களது உரிமைகளையும் நிலைநாட்ட அவ்வப்போது பிரத்யேக சட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.வரதட்சணை தடைச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடைச் சட்டம் 2005, பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் 2007, ஈவ் டீசிங் தடை சட்டம், ஆபாச சித்தரிப்பு தடைச் சட்டம், பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் என கிரிமினல் குற்றம் சார்ந்த சட்டங்களும்; கார்டியன் சட்டம் 1890, மணமான பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1959 என சிவில் உரிமை சட்டங்களும்; ஆனந்த் திருமண சட்டம் 1909, அந்நிய திருமணச் சட்டம் 1969, இந்து திருமணச் சட்டம் 1955, திருமணம் மற்றும் மனமுறிவு சட்டம் 1936 என, திருமண சட்டங்களும் பல்வேறு பட்டியல்களாக நீள்கின்றன இப்படி, மாறி வரும் சமூகச் சூழல், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு தகுந்தாற்போல் எண்ணற்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் சங்கிலித் தொடராக நிகழ்கின்றன.


செய்தித் தலைப்பையும் அதற்கு செய்தி ஆசிரியர் கொடுத்திருக்கும் படத்தையும் பாருங்கள்.
படம் மட்டும்தான் நாட்டு நடப்பை உண்மையாகச் சொல்கிறதோ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக நேற்றுதான் தினமலரில் செய்தி வந்திருந்தது. அது எவ்வளவு உண்மை என்று இன்று மற்றொரு செய்தி நிரூபித்துவிட்டது.

கள்ளக்காதலனை மிரட்ட தீக்குளித்த நடிகை பரிதாப மரணம்
தினகரன் 16 மார்ச் 2011

சென்னை : கள்ளக்காதலனை மிரட்ட உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த துணை நடிகை இறந்தார். போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல், ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் மஞ்சு (23). போரூர் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் பெஞ்சமின் என்பவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க மஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஏற்கனவே திருமணமான டிரைவர் நாகராஜூடன் மஞ்சுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெஞ்சமினிடம் இருந்து மஞ்சு பிரிந்தார். நாகராஜூடன் குடும்பம் நடத்த தொடங்கினார்.

ஆனால், மஞ்சுவுக்கு தெரியாமல் பூந்தமல்லியில் வசிக்கும் முதல் மனைவி வீட்டுக்கு நாகராஜன் சென்று வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னிடம் நிரந்தரமாக தங்க நெருக்கடி கொடுத்தார். இதை அவர் கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்தது. அவரை மிரட்ட தனது உடலில் மண்ணெ ண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார் மஞ்சு. உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நாகராஜ் தலைமறைவானார். சிகிச்சை பலனின்றி அன்று இரவு மஞ்சு இறந்தார்.
====


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.