இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 03, 2011

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி!

இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி எல்லைகடந்து அளவுக்கு அதிகமாகவே போய்விட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியைப் பற்றி நீதிமன்றங்களே விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது நிலைமை.

இந்த விஷயம் இப்போதுதான் நீதிமன்றங்களின் பார்வைக்கு வந்திருக்கிறது. ஆனால் இது எப்படி இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி படிப்படியாக அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

பொதுவாக இந்தியாவில் பெற்றோர்கள் தங்களின் குடும்ப சொத்தை மகனுக்கும், மகளுக்கும் சரிபாதியாக பிரித்து அதை திருமணத்தின்போது மகளுக்கு சீர்வரிசை என்ற பெயரில் கொடுத்து வந்தார்கள்.

அதன் பிறகு சில பெண்ணின் சகோதரர்கள் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்துகொண்டு தங்களின் சகோதரிகளுக்கு சேரவேண்டிய சரி சமமான சொத்துக்களை கொடுக்காமல் ஏமாற்ற ஆரம்பித்தார்கள். அதன்விளைவாக பெண்களின் சொத்துரிமையை நெறிப்படுத்தும்விதமாக 1950களில் இந்திய அரசாங்கம் பெண்ணுக்கு சம சொத்துரிமை என்ற சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தை ஏமாற்றி தங்களின் மகளுக்கு சேரவேண்டிய சொத்தை எப்படி கொடுக்காமல் ஏமாற்றலாம் என்று யோசித்த பெற்றோர்களும், சகோதரர்களும் “சீர்வரிசை” என்ற பெயரில் தங்கள் மகள்களுக்குக் கொடுத்து வந்த சொத்துரிமையை “வரதட்சணை” என்று பெயர் மாற்றம் செய்து அதை கொடிய குற்றமாக சித்தரிக்க ஆரம்பித்தார்கள்.

இதுதான் சமயம் என்று “பெண்ணுரிமை” சங்கங்கள் புற்றீசல்போல் கிளம்பி “வரதட்சணை” என்பது பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம் என்று பெண்கள் சொத்துரிமையை புதிதாக வேறுகோணத்திற்கு திருப்பி பிரச்சனையை ஊதி பெரிதாக்கி “பெண்ணுரிமை” என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து “தந்திரமாக இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனிபோல” தங்கள் வியாபாரத்தை மெதுவாகத் துவங்கினார்கள். இதில் போலியான பெண்ணியம் பேசும் பல சுயநல ஆண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பெண்ணுக்கு அவளது குடும்பத்தில் இருந்த சம சொத்துரிமை “வரதட்சணை” என்ற பெயரிலும் “புதிய பெண் விடுதலை” என்ற பெயரிலும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது.

இது முற்றிலும் பெண்ணின் உடன் பிறந்த ஆண்களும், அவர்களது பெற்றோர்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கு எதிராக செய்த மிகப்பெரிய சதி எனலாம். இந்த சதித்திட்டத்தை மறைக்கவே இது பிற்காலத்தில் பெண்ணை திருமணம் செய்யும் குடும்பத்தினரை குற்றவாளிபோல சித்தரிக்கும் புதிய ”வரதட்சணை” சட்டங்கள் உருவாகக் காரணமானது.

சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது முதல் இன்றுவரை இந்திய பெண்கள் சொத்துரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி பெண்ணுக்கு சம சொத்துரிமையை கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும் என்று பெண்களுக்காக குரல் கொடுத்த அல்லது கொடுக்கும் எந்த அமைப்பையாவது நீங்கள் பார்த்ததுண்டா?

ஆனால் “வரதட்சணை” கொடுமை என்று கூறி அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. இதற்காக பல நிதி ஒதுக்கீடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
  • 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
  • 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
  • 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.
ஆனால் இன்றுவரை வரதட்சணை பிரச்சனையும் ஒழிக்கப்படவில்லை. பெண்ணுக்கு சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கு சம சொத்துரிமை நடைமுறைக்கு வரும்வரை “வரதட்சணை” என்ற சொல்லை மறையாமல் தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் சுயநலமிகள். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி
யார் யாரோ பெண்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்துகொண்டு ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த “பெண் விடுதலை” என்ற சொல் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் பல பெண்கள் தங்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தன்வழிக்கு வராத கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தை பழிவாங்குவதற்கும் பயன்படுத்தும் ஆயுதமாக மாறிவிட்டது. தங்களுக்கு பிடிக்காதவரை பழிவாங்குவதற்காக இலவச கூலிப்படை போல காவல்துறையும், நீதிமன்றங்களும் இந்த வரதட்சணை சட்டங்கள் மூலம் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்று அவர்களுக்கே தெரியாமல் போகும் அளவிற்கு நாட்டில் பொய் வழக்குகள் அதிகரித்துவிட்டன.

பெண்ணுக்கு சம சொத்துரிமை என்பதை மறைத்து இந்த வரதட்சணை சட்டம் என்ற சூட்டில் பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு என்று பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

பெண் கொஞ்சம் நன்றாக சம்பாதிக்கும் நிலையில் இருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அவளது திருமண வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து அதில் நாலு காசு பார்க்கும் நிலைவரை இப்போது உயர்ந்துவிட்டார்கள் பெண்ணை பெற்றவர்கள்!

இதுதான் “பெண்களுக்கு சம சொத்துரிமை” என்ற சட்டம் “வரதட்சணை தடுப்புச் சட்டமாக” உருமாற்றப்பட்டு இப்போது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் அடித்துக்கொண்டிருக்கும் லூட்டி.

பெண்ணைப் பெற்றவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் இந்த நிலையை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 18.02.2011
FAO 439/2003 & Cross Objections No.1788/2003

SMT.SUMAN KHANNA ……Appellant
Vs.
SHRI MUNEESH KHANNA ……Respondent

CORAM:
HON'BLE MR. JUSTICE KAILASH GAMBHIR

22. It is often found that the malaise of the interference of parents in the married life of their daughters has become a major cause playing havoc with the matrimonial lives of young couples. All the parents guide, teach and discipline their daughters and are concerned about her welfare after marriage but it is imperative for the parents to draw a line as the prime concern should be that their daughter is happily settled in a new atmosphere at the husband’s place but not with day–to-day monitoring of the affairs taking place at the matrimonial home of the daughter. Parents should not become uninvited judges of the problems of their daughter, becoming an obstacle in the daughter’s married life, to plant thoughts in her mind and gain control over her and promoting disharmony in her family life. They are expected to advise, support and believe in their upbringing maintaining a discreet silence about the affairs of the matrimonial relationship. The present case is an unfortunate example where the parents of the appellant, instead of putting out the fire have fuelled and fanned it, resulting in the disruption of the sacred bond of marriage.
=====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.