இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 10, 2011

இணைந்த கைகள்

உன் எதிரியின் எதிரி உனக்கு நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கணவரும், அவரது மனைவியின் கள்ளக்காமத்லைவரும் ஒன்றாக இணைந்து மனைவியை கொன்றிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டால் அதை சரியான முறையில் தீர்த்துவைப்பதற்கு தகுதிவாய்ந்த பெற்றோர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இந்தக்காலத்து பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை நன்றாகச் செய்கிறார்கள்: 1. கணவனுக்கும் மனைவிக்கு ஏதாவது சிறு பிரச்சனை இருந்தால் அதை ஊதிப் பெரிதாக்கிவிடுவது. 2. பெண்ணிற்கு தவறான போதனை செய்து கணவனுக்கு எதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்ய வைப்பது.

இந்த இரண்டு சம்பவங்கள்தான் நாட்டில் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறான வழிகாட்டுதலில் செல்லும் பெண்கள் தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு இயலாமை கலந்த கோபத்தில் கணவனைப் பழிவாங்குவதாக முறையற்ற கள்ளக்காமத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது என்ன நடக்கும் என்பதுதான் பின்வரும் செய்தியாக வந்திருக்கிறது.

சட்டத்தை எழுதிய மேதைகளும், அதை செயல்படுத்திவரும் மேதைகளும் சட்டங்களை பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வழிவகை செய்து தந்திருக்கிறார்கள். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு வழிதவறி, வாழ்க்கை தவறி நிற்கும்போது எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள்.

தினகரன் 11 மார்ச் 2011

சென்னை : செய்யாறு பாலாற்று படுகையோரத்தில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. மணலில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை நாய்கள் தோண்டி வெளியில் எடுத்து போட்டிருந்தன. தகவலறிந்து டிஎஸ்பி ராஜேந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், மாகரல் எஸ்ஐ குமரகுரு, காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் சென்று விசாரித்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தூசி அருகேயுள்ள சின்ன ஏழையாஞ்சேரியை சேர்ந்த கல்பனா (26) என்பதும், கல்பனாவை அவரது கணவர் தமிழ்செல்வன், கள்ளக்காதலன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததும் தெரிந்தது.

தமிழ்செல்வன் போலீசில் அளித்த வாக்குமூலம்: மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு படப்பையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். முறைப் பெண்ணான கண்ணகியை 2வது திருமணம் செய்தேன். இதனால் கல்பனாவுக்கு என் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், சின்ன ஏழையஞ்சேரியை சேர்ந்த ரமேஷுடன், கல்பனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, கல்பனா தன்னிடம் இருந்த 9 பவுன் நகையை ரமேஷிடம் கொடுத்திருந்தார். 7 பவுனை மட்டும் ரமேஷ் திருப்பி கொடுத்துள்ளார். மீதி 2 பவுனை கேட்டு கல்பனா தொந்தரவு செய்தார். எனக்கும் ரமேஷுக்கும் கல்பனா எதிரியானதால் இருவரும் சேர்ந்து அவளை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி, எனது 2வது மனைவி கண்ணகியை அவரது வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கல்பனாவை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். கடந்த 5ம் தேதி, எனது 2 குழந்தைகள் விளையாட சென்றதும் ரமேஷை வீட்டுக்கு வரவழைத்தேன். இருவரும் சேர்ந்து கல்பனாவை தாக்கினோம். கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கினாள். அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றோம். உடலை கோணிப்பையில் கட்டி பைக்கில் ஏற்றி வந்து பாலாற்றில் புதைத்தோம். இவ்வாறு தமிழ்செல்வன் கூறினார். கைதான இருவரையும் போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
====

திருமணம் என்ற புனிதமான உறவில் இணைந்த கைகள் தவறான சட்டங்களால் பிரியும்போது வேறு சில கைகள் தானாக இணைகின்றன!
====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.