இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, March 04, 2011

பாசக்கார மனைவிகள்!

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை
தினகரன் 5.3.2011

கும்மிடிப்பூண்டி : டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என, பெண்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சாணாபுத்தூர் ஊராட்சியில் கொண்டமாநெல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, பெண்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, கடந்த 17ம் தேதி டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், மூடியிருந்த டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். மூடச்சொன்ன பெண்களே கடையை திறக்கோரி கோஷமிட்டதால், மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். தகவலறிந்து, பாதிரிவேடு சப்இன்ஸ்பெக்டர்கள் டில்லிகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.

‘கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மூடியதால் இங்குள்ள ஆண்கள் 5 கிமீ தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலம், அரூர் கிராமத்துக்கு சென்று மலிவு விலை மதுவை குடிக்கின்றனர். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மூடப்பட்ட கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்’ என பெண்கள் கூறினர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் மனு கொடுங்கள். அவர்கள் பரிந்துரையின்படி, டாஸ்மாக் கடை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சப்இன்ஸ்பெக்டர்கள் கூறினர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
======


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.