சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, March 09, 2011

தொடர்பில்லாத செய்திகள்!

கண்டிப்பாக இந்த இரண்டு செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என நினைக்கிறேன்!

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்
தினமலர் பிப்ரவரி 26,2011

புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

போலி சான்றிதழ் தந்த பெண் பைலட் கைது
தினமலர் மார்ச் 10,2011

புதுடில்லி : விமானத்தை தரையிறக்கும்போது சரியான முறையில் செயல்படாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் விமானி, போலி சான்றிதழ் கொடுத்து விமானிக்கான உரிமம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, டில்லி போலீசார் அவரை கைது செய்தனர்.

டில்லியை சேர்ந்த பர்மிந்தர் கவுர் என்ற பெண், தனியார் விமான நிறுவனத்தில் பெண் விமானியாக வேலைக்கு சேர்ந்தார். இவர் கடந்தாண்டு ஓட்டிச் சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பர்மிந்தர் கவுர் சரியான முறையில் செயல்படாததால், விமானம் பயங்கர சத்தத்துடன் தரையிறக்கப்பட்டது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிறுவனம், அவரிடம் விசாரணை நடத்தியது. அதில் விமானிக்கான தேர்வில் அவர் முழுமை பெறவில்லை என்று கூறி பணிநீக்கம் செய்தது. மேலும் விசாரணையில், விமானிக்கான சான்றிதழே போலியானது என தெரியவந்தது. விமானியாவதற்கு, சிவில் விமான போக்குவரத்து துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் தான் உரிமம் பெற முடியும். ஆனால், விமானிக்கான தேர்வில் வெற்றி பெற்றது போல், போலி சான்றிதழை பர்மிந்தர் கவுர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவில் விமான போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் கொடுத்த புகாரின் பேரில், டில்லி போலீசார் கீர்த்தி நகரில் வசித்த அவரை கைது செய்தனர்.
====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.