பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்
-
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா? - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி க...10 years ago
Saturday, December 31, 2011
பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல
ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, டி.ஜி.பி.,யின் கருத்து முறையானதல்ல. அரசாங்கமோ அல்லது போலீசாரோ பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய முடியாது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் அதனை தடுப்பதும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே முக்கியம் என கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், டி.ஜி.பி., கருத்தில் உடன்பாடு கிடையாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் என்ன அணிய வேண்டும் என்பதை உரிமை செய்ய அவர்களுக்கு உண்டு. இதனை கொள்கையாக மாற்ற முடியாது. இது போன்ற கருத்து மாநில டி.ஜி.பி.,யிடமிருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியும் ஆந்திர டி.ஜி.பி.,கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Monday, December 26, 2011
திருமண வரதட்சணைக்கு இன்சூரன்ஸ் உண்டா?
புதுடில்லி : திருமண விருந்தின் போது உணவு விஷமாகி, உறவினர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு கோரும் வகையில், இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்பட்டாலும், இதற்காக, சாமானிய மக்களும், பல லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையே கூடி வரும் திருமணம், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் தடைபட்டு, ஏராளமான பணம் வீணாக நேரிடுகிறது. இந்த சிரமத்தை போக்க, "ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்ட்' நிறுவனமும், "பஜாஜ் அலையன்ஸ்' நிறுவனமும், திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
நான்கு வகை பிரிவுகளில், இன்சூரன்ஸ் செய்வோருக்கு, இரண்டு லட்சம், நான்கு லட்சம், ஆறு லட்சம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் வரை, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக, 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, பிரீமியம் செலுத்த வேண்டும்.
தீ விபத்து மற்றும் வேறு வகையான விபத்துகள், கொள்ளை, திருட்டு ஆகிய காரணங்களால், திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு வழங்கப்படும். திருமண விருந்தின் போது, உணவு விஷமாகி விருந்தினர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு பெற இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் வழி செய்கின்றன.
சில மரணங்களாலோ, மணமக்கள் காயம் பட்டு, அதனால் திருமணம் தடை பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, இழப்பீடு பெற முடியும். ஆனால், மணமக்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட முறையிலான கருத்து வேறுபாட்டால் திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு பொருந்தாது.
Tuesday, December 13, 2011
இரண்டு பெண்களும் போலிஸூம்
டிசம்பர் 14,2011 தினமலர்
சென்னை : "" ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதற்காக தான் புகார் அளித்தேன்,'' என்று பிரியதர்ஷிணி தெரிவித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம், கனகதாரா நகர், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சாகர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இவரது மகள் பிரியதர்ஷினி. திருச்சியைச் சேர்ந்தவர் வருண்குமார், ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி. இவர்கள் இருவரும், கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகடமி ஒன்றில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தேர்வுக்காக டில்லி சென்ற போது, வருண் குமார், தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பிரியதர்ஷிணியை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர்கள் பயிற்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளனர்.
அதன் பின், தேர்வு எழுதியதில், வருண் குமார் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்காக டில்லி சென்ற போது, பிரியதர்ஷிணியே அவருக்கு பொருளாதார உதவிகளை செய்து வந்தார். டில்லியில் இருவரும் இருந்த போது, தன் மகனை பார்த்துக் கொள்ளுமாறு பிரியதர்ஷிணிக்கு வருணின் தந்தை வீரசேகரன் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளார். பிரதான தேர்வு முடிந்த பின், வருணும் பிரியதர்ஷிணியும் கடந்தாண்டு நவம்பர், சென்னை வந்தனர். அதன் பின், நேர்முகத் தேர்வுக்கு தயாராகினார் வருண். அதற்கும் பல வழிகளில் பிரியதர்ஷிணியே பணம் செலவழித்துள்ளார்.நேர்முகத் தேர்வுக்காக, தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் வருணுக்கு கொடுத்தார் பிரியதர்ஷிணி. இந்தாண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் செய்வதாகவும் இரு குடும்பத்தினர் பேசினர். இதற்கிடையில், வருண்குமார் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்குச் சென்ற நிலையில், பிரியதர்ஷிணியை திருமணம் செய்ய வேண்டுமானால் பி.எம்.டபிள்யூ.,கார் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கிலோ தங்கம் வேண்டும் என வருணின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
மற்றொருபுறம், பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக வருண், பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். அதன் பின், வருண் திருமணம் செய்து கொள்ள மறுக்க, பிரியதர்ஷிணி வருணிடம் கேட்ட போது, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், சமீபத்தில் பிரியதர்ஷிணி புகார் அளித்தார். புகார் குறித்து, விசாரணை நடத்துமாறு, வடபழனி உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் பிரியதர்ஷிணி, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங்கை சந்தித்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக இங்கு வந்தேன். அவர் தேர்வில் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் நான் இருந்த போட்டோ, கடந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், அவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., விவரங்களையும் பதிவு செய்து கூடுதல் கமிஷனரிடம் கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
வருண்குமார், தற்போது என்னை தெரியாது என்றும், எனது நடத்தையை குறையாகவும் கூறியுள்ளார். பழகி விட்டு, அதன் பின் ஒரு பெண் எதிர்த்தால், அப்பெண்ணைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். எனக்கு, வருண் குமாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன் பதவியை பயன்படுத்தி, மற்றவர்களை மிரட்டுகிறார். அப்படி இனியாரையும் அவர் மிரட்டக் கூடாது. பிரச்னைகளை பேசி தீர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவர் எனது உயிருக்கே மிரட்டல் விடுத்ததால் தான் நான் புகார் அளித்தேன். அவர், என்னை தெரியாது என்கிறார். அப்படியானால், அவர் வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து எனக்கு," நான் வேறு பெண்களை பற்றி கூறியபோதும் என் பெற்றோர் வேண்டாம் என்றனர். உன்னையும் வேண்டாம் என்கின்றனர். அவர்களை சம்மதிக்க வைப்பேன்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். அது எப்படி சாத்தியமாகும். அவரை பழிவாங்க வேண்டி, புகார் அளிக்கவில்லை. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தான் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.ஈரோடு : கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது வீட்டின் முன் குழந்தையுடன் அமர்ந்து, இளம்பெண் தர்ணா போராட்டம் செய்தார். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது மகள் பிருந்தா தேவி,29; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
ஈரோடு அருகே வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுக கவுண்டர் மகன் ராதாகிருஷ்ணன். திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்கு வந்த பிருந்தா தேவி, தன் குழந்தையுடன் வீட்டு வாயிலில் அமர்ந்தார். "எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கோரி, விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிருந்தா தேவி கூறியதாவது: திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்தேன். வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அங்கு பனியன் கம்பெனி நடத்தி வந்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. 2008ல் திருப்பூர் மாவட்டம், மூலனூரில் உள்ள குலதெய்வம் கோவிலில், எங்கள் குடும்பத்தார் சம்மதத்துடன், எனக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மாற்று ஜாதி காரணமாக, கணவர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வீட்டிலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்த போது, ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். போலீசார் தலையிட்டு, எங்களை சேர்த்து வைத்தனர்.டிச., 5ம் தேதி, திருப்பூர் வந்த ராதாகிருஷ்ணனின் அண்ணன் சிவசங்கர், உறவினர்கள் கஸ்தூரி, லலிதா, சிவசங்கர் ஆகியோர், என் கணவரை அழைத்துச் சென்று விட்டனர். அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். நேற்று முன்தினம் மாலை, மகளிர் போலீஸ் ஒருவர், ஈரோட்டில் உள்ள என் கணவன் வீட்டுக்கு என்னை அழைத்து வந்தார். என் கணவரிடம், "சேர்ந்து வாழுங்கள்' என, அறிவுரை கூறிவிட்டு, பெண் போலீஸ் சென்று விட்டார். ஆனால், என் கணவர் குடும்பத்தார், "உனக்கும் என் மகனுக்கும் திருமணமே நடக்கவில்லை. பல ஆண்களுடன் உனக்கு தொடர்பு உள்ளது. இந்த குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது' என்று கூறி, என்னை வெளியே தள்ளி, வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. இவ்வாறு பிருந்தா தேவி கூறினார்.
ராதாகிருஷ்ணன் உறவினர்கள் கூறுகையில், "இவர் விபசார கும்பலை சேர்ந்தவர். இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. ராதாகிருஷ்ணனுக்கும், இவருக்கும் திருமணமாகவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன' என்றனர்.பிருந்தா தேவி கூறுகையில், ""ராதாகிருஷ்ணன் தான் என் கணவர். வேண்டுமானால் என் குழந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய தயார்,'' என்றார்.
கணவன் வீட்டாரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பிருந்தா தேவிக்கு, வீரப்பன்சத்திரம் போலீசார் இரண்டு பேர், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு வரை, பிருந்தா தேவி அங்கேயே இருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, November 24, 2011
குடும்பம் ஒரு கதம்பம் - இந்தியக் குடும்பம் 2020
பொய் வரதட்சணை வழக்குகள் உருவான பிறகு கணவனுக்கு நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக விவாகரத்து கொடுக்காது. அதனால் அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் வாழவேண்டியதுதான். பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண் வழக்கு என்ற பெயரில் போலிஸ் மற்றும் நீதித்துறையின் வலையில் சிக்கி ஆண்டுகளை கழிக்கவேண்டியதுதான். இதனிடையே தனிமைக்கு தீணி போட பலரும் வட்டமிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உருவாவதுதான் கள்ளக்காதல், கொலை போன்ற சம்பவங்கள்.
பொய் வரதட்சணை வழக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லையென்றால் “இந்தியக் குடும்பம் ஒரு கதம்பம்” போல மாறிவிடும். எந்தக் குழந்தைக்கு யார் அப்பன் என்று தெரியாது. யாருக்கு யார் மனைவி என்று தெரியாது. யாருக்கு யார் கள்ளக் காதலன் என்று தெரியாது. யாருக்கு யார் கள்ள மனைவி என்று தெரியாது. இதுதான் இந்தியக் குடும்பம் என்று உலகம் சொல்லும் அளவிற்கு நாடு உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்போதே விழித்துக்கொண்டால் இந்தியக் குடும்பங்களை காப்பாற்றலாம்.
குடும்பம் ஒரு கதம்பம் - பொய் வரதட்சணை வழக்குகளால் சிதையும் குடும்பங்களின் நிலை எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்
தினமலர் நவம்பர் 24,2011
சென்னை- வேலை தருவதாகக் கூறி, தகாத உறவு கொண்டு ஏமாற்றியதால், தொழில் அதிபரை கொன்றோம் என்று, தம்பதியினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
சென்னை, நங்கநல்லூர், அபிலாஷ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த சந்திரசேகர், 55. கொசுவலை பொருத்தும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி, 45; வங்கி அதிகாரி. கடந்த 18ம் தேதி பணிக்குச் சென்ற கவுரி ஷிப்ட் முடிந்து இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் படுக்கையறையில், அவரது கணவர் சந்திரசேகர் பிணமாகக் கிடந்தார். டெலிபோன் ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட் என, எட்டு சவரன் நகைகள், வாட்ச் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் மாயமாகியிருந்தன.பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.
துணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் மேற்பார்வையில், தனிப்படைகள் அமைத்தனர். கொலை செய்ததாக சிவக்குமார், 36 மற்றும் கவிதா, 28 ஆகிய இருவரையும், பல்லடம் அருகே சின்னக்கரையில், கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சூரக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், வீட்டாருடன் தொடர்பற்றுப் போனது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்ற நிலையில், சிவக்குமார், அவினாசிக்கு வந்துள்ளார். அங்கு தான், புதுச்சேரி அருகில் உள்ள பாகூரைச் சேர்ந்த கவிதாவை சந்தித்துள்ளார். கணவனை பிரிந்து குழந்தையுடன், ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய கவிதாவை, திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
திருப்பூர், சிவகங்கையில் சரியான வேலை அமையாததால், சென்னையில் வேலை தேடியுள்ளனர். அப்போதுதான் சந்திரசேகரின் விளம்பரத்தை பார்த்து, கவிதா அதிலிருந்த எண்ணில், சந்திரசேகரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், கவிதாவை பலமுறை தொடர்பு கொண்ட சந்திரசேகர், வேலைக்கு வந்தால், அதிகளவில் சம்பளம் தந்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி காரைக்குடியிலிருந்து இருவரும் சென்னை வந்து, பணியில் சேர்ந்துள்ளனர்.
அன்று பிற்பகல் மனைவி வங்கிக்குச் சென்றதும், கவிதாவை அழைத்த சந்திரசேகர், பணமும், இருக்க இடமும் தருவதாகக் கூறி, கள்ள உறவு வைத்துக் கொண்டார்.இந்த உறவு பலமுறை தொடர்ந்துள்ளது. அடுத்த நாளும் அழைத்து உல்லாசம் அனுபவித்ததுடன், தனக்கு தெரிந்த வேறு ஒருவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு ஒப்புக் கொள்ளாத கவிதா, அங்கிருந்து வெளியேறி, சிவக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அன்றிரவே, தங்களை ஏமாற்றிய சந்திரசேகரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, மறு நாள் காலை, 18ம் தேதி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து, சந்திரசேகரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, டெலிபோன் ஒயரைக் கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு, நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து தப்பிவிட்டனர்.
Friday, November 18, 2011
இன்றைய சூடான காமெடி செய்தி!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
நவம்பர் 18,2011 தினமலர்
கோவை: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு, மாவட்ட அளவிலான வல்லுநர் குழு அமைக்க வேண்டும்' என்று, தமிழக அரசுக்கு, கலெக்டர் தலைமையிலான [...]
திருநெல்வேலி : கணவனை காரை ஏற்றி கொலை செய்த கள்ளக்காதலனுக்கு மனைவி கார் வாங்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வாக்குமூலத்தில் தெரிவித்து [...]
பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரிப்பு என்று அறிக்கை சமர்ப்பித்தால் ஐ.நா. சபையிலிருந்து பெண்கள் வளர்ச்சி நிதியாக கோடிக்கணக்கான பணம் கிடைக்கும்!
Theschemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).
Wednesday, November 16, 2011
கணவனைக் கொல்லும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்
நவம்பர் 17,2011 தினமலர்
திருநெல்வேலி : கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன், 41, திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். விஸ்வநாதன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து, அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்று வருவார்.
சில தினங்களுக்கு முன், காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில், இவர் மீது கார் மோதியது. இதில் காயமுற்றவர், நெல்லையில் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். விசாரணையில், அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே, கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து, ஆதிலட்சுமி தந்த தகவலின்படி, குமாரின் ஏற்பாட்டில் ஒரு காரை கொண்டு மோதி, விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. ஆதிலட்சுமி, கள்ளக் காதலன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை நடந்த விதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
====
இந்திய கள்ளக்காதல் சட்டப்படி (IPC497) கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி. ஆண் மட்டுமே குற்றவாளி.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
Tuesday, November 15, 2011
சுவாரஸ்யமான கதை சொல்லும் கள்ளக்காதல்
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
நவம்பர் 16,2011 தினமலர்
மத்தூர்:மத்தூர் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொலை செய்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன், அவனது நண்பனையும், போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மத்தூர் அடுத்த அத்திகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி சஞ்சீவன்,38. இவரின் மனைவி அனிதாதேவி,27. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். அனிதாதேவி மத்தூர் போலீசில், கடந்த 1ம் தேதி, "பெங்களூரு செல்வதாக வீட்டை விட்டுச் சென்ற கணவன் சஞ்சீவன் வீடு திரும்பவில்லை' என புகார் செய்தார்.
சில நாட்களுக்கு முன், ஊத்தங்கரை அடுத்த அருணம்பதி ஏரியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டு, மண்ணில் பாதி உடல் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். தொழில் போட்டியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு எதிரிகள் யாராவது இருந்தார்களா? என்ற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை எனத் தெரிந்தது.சந்தேகம் அடைந்த போலீசார், அனிதாதேவியிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாகக் கூறினார். தொடர்ந்து நடந்த விசாரணையில், அனிதாதேவி அவரின் கள்ளக்காதலன் ஜெயப்பிரகாஷ், அவரின் நண்பர் சங்கர் ஆகியோர் கூட்டு சேர்ந்து, சஞ்சீவனை கொலை செய்து, ஏரியில் புதைத்தது தெரிந்தது. மூவரையும், போலீசார் கைது செய்தனர்.
அனிதாதேவி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:என் சொந்த ஊர் அரூர். அங்கு, என் சகோதரர்கள் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். எனக்கும் சஞ்சீவனுக்கும் திருமணம் நடந்ததும், நாங்கள் அத்திகானூர் கிராமத்துக்குச் சென்று விட்டோம்.என் கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததால், குஜராத் மாநிலம் சூரத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுப்பார். பின், அந்தப் பணத்தைக் கேட்டு என்னைத் தாக்குவார். குடிபோதையில் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.
நான் கோபித்துக் கொண்டு, அடிக்கடி அரூரில் உள்ள என் சகோதரர்கள் வீட்டுக்கு வருவேன். என்னை சமாதானம் செய்து, டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில், அத்திகானூர் கிராமத்துக்கு, டிரைவர் ஜெயப்பிரகாஷுடன் அனுப்பி வைப்பர்.ஜெயப்பிரகாஷ் என்னிடம் அன்பாகப் பழகுவார். அவருக்கு, திருமணமாகி மனைவி இறந்து விட்டார். என் கணவர் மீதுள்ள கோபம், ஜெயப்பிரகாஷ் மீது கள்ளக்காதலாக மாறியது. இதனால், நாங்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்தோம். என் கணவர் ஊரில் இல்லாத நேரத்தில், கணவன், மனைவி போல இருந்தோம்.
சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன், "என் கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை' என, ஜெயப்பிரகாஷிடம் கூறி அழுதேன். அவர் இருக்கும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே, அவனை தீர்த்து கட்டி விடுவோம். பின், ஆறு மாதம் கழித்து, நாம் திருமணம் செய்து கொள்வோம்' என்றேன். இதற்கு உதவியாக, ஜெயப்பிரகாஷின் நண்பர் கரூரைச் சேர்ந்த சங்கரையும் அழைத்தோம். பின், நாங்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.முன்கூட்டியே கத்தி, நைலான் கயிறு உள்ளிட்டவை வாங்கி, வீட்டில் வைத்திருந்தேன். கடந்த 1ம் தேதி இரவு, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது, ஜெயப்பிரகாஷும், சங்கரும், கொலை செய்த பின், சஞ்சீவனை புதைக்க, ஊத்தங்கரை அருகே உள்ள அருணம்பதி ஏரியில், இடம் தேர்வு செய்தனர்.மழை பெய்ததால், அவர்கள் சென்ற கார் சேற்றில் சிக்கிக் கொண்டது எனக் கூறி, பக்கத்தில் இருந்த வீட்டில், கடப்பாறை, மண்வெட்டி வாங்கிக் குழி தோண்டி தயார் நிலையில் வைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்காக, என் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வைத்திருந்தேன்.
ஜெயப்பிரகாஷும், சங்கரும், இரவு 11 மணிக்கு, பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் வந்தனர். சஞ்சீவன் பெட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் என் கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். அப்போது, நான் கையைப் பிடித்துக் கொண்டேன். சங்கர் காலை பிடித்துக் கொண்டார். ரத்தம் அதிகளவில் வந்ததால், பெட்ஷீட் கொண்டு முகத்தை மூடினோம். பின், நைலான் கயிறு மூலம் இறுக்கி, தலையணையால் அழுத்திக் கொலை செய்தோம்.
பிணத்தை காரில் கொண்டு சென்றோம். செல்லும் வழியில், ரத்தக்கறை படிந்த ஒரு பெட்ஷீட்டை, மத்தூர் கொடமாண்டப்பட்டி பாலத்திலும், மற்றொரு பெட்ஷீட்டை குன்னத்தூரிலும் வீசினோம். அருணம்பதி ஏரியில் தயாராகத் தோண்டி வைத்திருந்த குழியில், அவசர அவசரமாகப் புதைத்தோம்.நாங்கள் மூன்று பேரும், ஊத்தங்கரையில் உள்ள ஒரு லாட்ஜில் குளித்து விட்டு, நான் அத்திகானூருக்கு வந்தேன். ஜெயப்பிரகாஷ் திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூருக்கும், சங்கர் கரூருக்கும் சென்றனர்.ஆனாலும், எனக்கு பயம் வந்தது. போலீசார் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பதட்டத்துடன் காணப்பட்டேன். போலீசார் என்னிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டேன்.இவ்வாறு, அனிதாதேவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Monday, November 14, 2011
குடும்ப உடைப்புத் திட்டம் நிறைவேறுமா?
வரதட்சணைப் புகார் வரும்போது அதனை உடனடியாக வழக்காக பதிவு செய்யாமல் வரதட்சணை தடுப்பு அலுவலரைக் (மாவட்ட சமூக நல அலுவலர்) கொண்டு முதற் கட்ட விசாரணை செய்து பிறகுதான் போலிஸ் அந்தப் புகாரை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வரதட்சணை தடுப்புச் சட்டம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் இதுவரை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இருக்கின்ற சட்டங்களை யாருமே மதிப்பதில்லை. பிறகு ஏதோ வித்தை காட்டுவது போல எதையாவது காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது யார் வீட்டில் இந்த “தீ” பற்றி எரிந்தது என்று தெரியவில்லை. இப்போதாவது விழிப்புணர்ச்சி வந்திருக்கிறதே!
வரதட்சணைக் கொடுமை, குடிபோதை கணவனின் துன்புறுத்தல், கணவனின் கள்ளத் தொடர்பு உள்ளிட்ட பிரச்னைகளால் போலீசில் புகார் அளிக்கும் பெண்களின் எண்ணிக்கை கோவை நகரில் அதிகரித்து வருகிறது. அதே போன்று, மனைவி நடத்தையில் சந்தேகம், கள்ளத்தொடர்பு காரணமாக கணவன்மார் தரப்பிலும் அவ்வப்போது புகார் அளிக்கப்படுகிறது. குடும்பப் பிரச்னைகள் தொடர்பான புகார் வந்தால் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து, முடிந்தவரை "கவுன்சிலிங்' அளித்து கணவன் - மனைவியை சேர்த்து வைக்க முயற்சிக்கின்றனர். முடியாத நிலையில், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக கோவை மாநகரில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, "பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண் - 1091' செயல்படுகிறது; குடும்ப பிரச்னைகளுக்காக பெண்கள் போன் செய்து உதவி பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் தொடர்ச்சியாக மாநகர போலீசில், "மொபைல் கவுன்சிலிங்' (நடமாடும் கலந்தாய்வுக்குழு) துவக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அளிக்கும் குழுவில் ஆலோசகர்கள் கோதனவள்ளி, மகாலட்சுமி, சுகுமாரி இடம்பெற்றுள்ளனர். இவர்கள், அவ்வப்போது நகரிலுள்ள 15 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர். இவர்களுடன் வக்கீல், அரசு டாக்டர், போலீஸ் அதிகாரிகள் செல்லவுள்ளனர். குடும்பப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆண், பெண்களை அழைத்து "கவுன்சிலிங்' அளிப்பதே இக்குழுவின் நோக்கம்.
இத்திட்டத்தின் துவக்க நாள் கவுன்சிலிங் சமீபத்தில் ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. குடும்ப நல ஆலோசகர் கோதனவள்ளி தலைமையிலான குழு உறுப்பினர்கள், மாநகர போலீஸ் மேற்குப் பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக் கமிஷனர் ராஜா, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதிஅனுசுயா பங்கேற்று, 11 குடும்ப உறுப்பினர்களுக்கு "கவுன்சிலிங்' அளித்தனர். இதில், இரண்டு குடும்பத்தினரின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்; மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து "கவுன்சிலிங்' அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மற்ற போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குள்ளும் "மொபைல் கவுன்சிலிங்' நடக்கவுள்ளது.
"மொபைல் கவுன்சிலிங்' திட்ட ஒருங்கிணைப்பாளர் கோதனவள்ளி கூறியதாவது:குடும்ப அமைப்பில் பெண்கள் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்துக்குப் பின் கணவராலும், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களாலும் பிரச்னைகள் எழும்போது, "வரதட்சணைக் கொடுமை' புகார் அளித்துவிடுகின்றனர்; ஒரு சில பெண்கள், தனிக்குடித்தன நோக்கம் நிறைவேறாத போது மாமனார் மற்றும் மாமியார் மீது பொய்யான புகார்களை தெரிவிப்பதும் உண்டு. இதுதொடர்பான புகார்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நேரிடும். அவ்வாறு செய்தால் குடும்பம் பிளவுபடும்; பிள்ளைகள் இருந்தால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பதிலாக இரு தரப்பினரையும் அழைத்து "கவுன்சிலிங்' அளித்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்; குடும்பத்திலும் அமைதி நிலவும். இதற்கான முயற்சியாகவே, "மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி துவக்கியுள்ளார். இவ்வாறு, கோதனவள்ளி தெரிவித்தார்.
19 வயதில் பாழானது வாழ்க்கை!ஆர்.எஸ்.புரத்தில் நடந்த முதல் "மொபைல் கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 19 வயது இளம்பெண், தனது பிரச்னையை ஆலோசகர்களிடம் தெரிவித்து கதறி அழுதார். "என்னை காதலித்து திருமணம் முடித்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் பிழைப்புக்கு வழியின்றி நகைத்தொழிலில் ஈடுபட்டேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய நபர், என்னுடன் "தொடர்பு' வைத்து கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, தெரிவித்தார். இவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறிய ஆலோசனைக் குழுவினர், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.
Sunday, November 06, 2011
கொடிகட்டி பறக்கும் இந்திய கள்ளக் காதல் கலாச்சாரம்!!
நாகப்பட்டனம்: மருமகனுடன் வைத்திருந்த தகாத உறவைக் கண்டு கொதித்த கணவர், தனது மனைவியைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் தகாத உறவுகளின் அளவும், அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. பெரும் சமூக சீரழிவை நோக்கி மக்களில் சிலர் வேகமாகப் போய் வருவதை நிரூபிக்கும் விதமாக இத்தகையக அடாத உறவுகள் குறித்த செய்திகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகையில், மருமகனுடன் கள்ளக் காதல் கொண்டிருந்த மாமியார், அதைக் கண்டித்த தனது கணவரை மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த கொடும் செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.
அகரங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (43). இவரது மனைவி ஜோதி. இவருக்கு 40 வயதாகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
முதல் மகள் தேவிக்கும், வேதாராண்யத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் நாகராஜனுக்கும் காதல் கல்யாணம் செய்து வைத்தனர். தேவி தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் தேவியின் கணவருக்கும், ஜோதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தி்ல ஊர் திரும்பியபோது ஜோதியின் அடாத செயல் தெரிய வந்து அதிர்ந்தார். இதையடுத்து தனது மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனாலும் ஜோதி தனது போக்கை கைவிடுவதாக இல்லை. நாகராஜனுடன் தொடர்ந்து உறவைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவர் தொடர்ந்து எச்சரித்து வந்ததால் அவரைக் கொலை செய்து விட தீர்மானித்தார்.
இதையடுத்து தனது மருமகனுடன் சேர்ந்து நேற்று பன்னீர்செல்வத்தை தாக்கி தலையை சுவரில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார் ஜோதி. பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் கூறி கூச்சல் போட்டு நாடகமாடசினார்.
ஆனால் அக்கம் பக்கத்து மக்களுக்கு ஜோதி குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக தெரியும் என்பதால், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸார் விரைந்து வந்து ஜோதியைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை கக்கி விட்டார். இதையடுத்து ஜோதியையும், அவரது மருமகன் நாகராஜனையும் போலீஸார் கைது செய்தனர்.
கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி. ஜோதி போன்றவர்கள் அதை மாற்றிப் புதுமொழி படைப்பது கொடுமையிலும் பெரும் கொடுமையாகும்.
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011
Saturday, November 05, 2011
பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்யும் உதவி - யாராலும் தடுக்க முடியாது!!
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
நவம்பர் 06,2011 தினமலர்
காட்டுமன்னார்கோவில் ;சிதம்பரம் அருகே, திருமண உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள். கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, தன் மகள் மாரியம்மாள் திருமணத்திற்கு, அரசின் உதவித் தொகை வழங்கக்கோரி, குமராட்சி ஒன்றிய சமூக நலத்துறையில், ஊர் நல அலுவலராக உள்ள மல்லிகாவிடம், மனு கொடுத்தார். அரசு உதவித்தொகை கிடைக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான், மனுவை அரசுக்கு பரிந்துரை செய்வதாக மல்லிகா கூறியுள்ளார். "நான் கூலித் தொழிலாளி, அவ்வளவு பணம் கொடுக்க இயலாது' எனக் கூறியும் கேட்காத அவர், பணத்தைக் கொண்டு வரும்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். இதனால் விரக்தியடைந்த கலியபெருமாள், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர், ரசாயனம் தடவிய பணத்தை கலியபெருமாளிடம் கொடுத்து, ஊர் நல அலுவலரிடம் கொடுக்கச் செய்தனர். அதன்படி, நேற்று கலியபெருமாள், ரசாயனம் தடவிய பணத்தை மல்லிகாவிடம் கொடுத்தார். அவரைப் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மல்லிகாவை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
Tuesday, October 25, 2011
புது மணப்பெண்ணின் காதலா! காதலாலா!!
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 25, 2011 OneIndia
சேலம்: ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த பெண் திருமண நாளன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.
சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கையிலேயே வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது.
இதையடுத்து அவர் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலியைக் கட்டிவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
வசந்தப்பிரியா தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். அதிகாலையில் பார்த்தால் மணப்பெண்ணைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த வசந்தபிரியா தனது இன்னொரு காதலனான ரமேஷை பழினியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் தம்பதி சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார் தகராறு செய்தனர். அந்த 2 குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.
Monday, October 17, 2011
தராளமாக லஞ்சம் வாங்கலாம் - மன்னித்து விடுவார்கள்.
சென்னை:""புகார் கொடுக்க வந்தவரிடம், பணம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு, கட்டாய ஓய்வு அளித்தது செல்லும்,'' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரோஜா.புகார் கொடுக்க வருபவர்களிடம், அதன் மீது நடவடிக்கை எடுக்க பணம் கேட்பதாக, இவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டது. இதை அடுத்து செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், சரோஜா மனு தாக்கல் செய்தார். பின், இம்மனு ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:விசாரணை அதிகாரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், லஞ்ச நடவடிக்கைக்கு முறையான தண்டனை, பணி நீக்கம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் மனுதாரரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கட்டாய ஓய்வு அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதாகவும், பணம் பெற்ற பின் நகல் அளித்ததாகவும், விசாரணையின் போது சரோஜாவின் முன்னிலையிலேயே சுரேஷ்பாபு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது சாட்சியம் உறுதியானது. சாட்சியத்தை ஏற்றதற்கான காரணங்களை விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் செயல்பட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
Thursday, October 13, 2011
வரதட்சணை சட்டங்களைப் பற்றி கிராமப்புறங்களில் விழிப்புணர்ச்சி தேவை!
நகர்ப்புறங்களில் இருக்கும் இந்த சட்ட விழிப்புணர்ச்சி கிராமப் புறங்களில் சரியாக பரவவில்லை போலிருக்கிறது!
விழுப்புரம் : கணவருக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம், குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன்; இவரின் மனைவி நிஷாந்தினி,24. இவர்கள், கடந்த 2004ல், காதல் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில மாதங்களில் அரிகரன், வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நிஷாந்தினிக்கும், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி,28, என்பவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நிஷாந்தினி, தன் முதல் திருமணத்தை மறைத்து, கடந்த ஜூன் 12ம் தேதி, விநாயகமூர்த்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், வெளிநாட்டிலிருந்து வந்த அரிகரன், மனைவி இரண்டாம் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தான் வாங்கிக் கொடுத்த பொருட்களைத் திரும்பத் தருமாறு, நிஷாந்தினியிடம் அவர் கேட்டபோது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
முதல் திருமணம் பற்றி விநாயகமூர்த்திக்குத் தெரிந்ததால், மனமுடைந்த நிஷாந்தினி, கடந்த 8ம் தேதி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கண்டமங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
Wednesday, October 12, 2011
என்ன செய்யலாம்?
மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் ஐகோர்ட் நீதிபதியின் மகள் மனிஷா மாஷே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகராஷ்டிரா மாநில ஐகோட் முன்னாள் நீதிபதியும் மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவருமான மாஷேயின் மகள் மணிஷா. இவர் வக்கீலாக தொழில் நடத்தி வருகிறார்.
இவர் தேசியநுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தி்ல் உள்ள வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட நபருக்கு சாதமாக தீர்ப்பு பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக லஞ்சமாக ரூ.30 லட்சம் தருவது என முடிவானது. இந்த பணத்தை பெறுவதற்காக புனே வந்த மணிஷாவின் ஆதரவாளர்கள் இருவரை சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த சிபிஐயினர் அவுரங்காபாத்தில் வைத்து மணிஷாவை கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மணிஷா போனில் பேசிய விவரங்களையும் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரிடமும் வரும் 18-ம் தேதி வரை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் முதல்அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.
இது தமிழகத்தின் செய்தி....
Thursday, October 06, 2011
இளம் பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுங்கள்
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு பிறகு செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள்
கருத்துக்கள்...
"பெண்கள் மனோபாவம் மாறிவிட்டது!' சென்னையில் திருமண தகவல் மையம் நடத்தும், கீதா தெய்வசிகாமணி:
"இவர் தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ, துக்கமோ, இனி, இவர் கூடத்தான்...!' என்று, வருங்காலத் துணையைத் தன் பாதுகாப்பாக நினைக்கும் மனோபாவம், பெண்களிடம் போய்விட்டது. திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு, இன்று முற்றிலும் மாறிவிட்டது. இப்போது, பல பெண்கள் வேலை, "புராஜெக்ட்' என, வெளியூர், வெளிநாடுகளுக்குப் போய் வருவது, சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை வசதி, சுதந்திர மனப்பான்மை போன்றவற்றை, நம் கலாச்சாரத்திலும் எதிர்பார்க்கின்றனர்; தன்னை யாரும் பேச்சில் கூட கட்டுப்படுத்தக் கூடாது என நினைக்கின்றனர்.
இன்றைய பெண்களிடம், "இது நிச்சயம் வெற்றிகரமான திருமணமாக அமையும்' என்ற நம்பிக்கை இல்லை. நல்ல படிப்பு, நல்ல நிறு வனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் போன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கின்றன. எனவே, மணவாழ்க்கை, 40, 50 வயதிலும் சிறப்பாகவே இருக்கும் என நினைக்காமல், "உயரம் இரண்டு இன்ச்' கூடுதலாக எதிர்பார்க்கிறேன்; கலர் கொஞ்சம் பத்தாது' என, ஏதோ சினிமாவிற்கு ஹீரோவை தேர்ந்தெ டுக்கும் பாணியில், கணவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தனக்கு வரப்போகும் கணவர், நன்கு படித்து, வேலையில் இருக்கிறார்; நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு அவரது பெற்றோரின் பொறுமை, தியாகம், அன்பு தான் காரணம் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, "பேரன்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது' என்கின்றனர். முதலில், தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து, 20 - 24 வயதுகளில் திரு மணம் செய்து கொள் ளும் பெண்கள், நிச்சயம் வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வர் என்பதில் சந்தேகமில்லை!
Wednesday, September 28, 2011
காதலித்தவனை கைப்பிடிக்க புதிய வழி!
குறி சொல்பவரின் பேச்சை கேட்டு, பல்லாவரம் மார்க்கெட்டில் இளம்பெண் நிர்வாணமாக சென்றார். அவரை, "பேய்' என நினைத்து பலரும் அலறி அடித்து ஓடினர். துணிச்சல்கார இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண்ணுக்கு உடை அளித்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து, சென்றபோது, தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்ததுடன், நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச்சை எடுத்து, கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். அப்போது தான், அது பேயல்ல... இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்தது.
உடனடியாக, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசை பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓடினார். அரை கிலோமீட்டர் விரட்டி, பல்லாவரம் மார்க்கெட் அருகிலேயே மடக்கிப் பிடித்து, அப்பெண்ணுக்கு உடைகளை மாட்டி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த பெண், அப்பகுதியில் ஒருவரை காதலித்துள்ளார். நன்றாக பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரென கம்பி நீட்டிவிட, அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், "நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடலுடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்' என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அப்பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊருக்கு தெரிந்து விடும் என்று, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு குளித்துவிட்டு, ஈரஉடையுடன் பொழிச்சலூர் - பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாக களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து, நிர்வாணமாக பல்லாவரம் வந்ததாக தெரியவந்தது.பின்பு பல்லாவரத்தில் இருந்து, குரோம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து, நேற்று காலை மீண்டும் விசாரித்தபோது, இது போன்று ஊர்வலமாக போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசி சேர்த்து வைப்பார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
""பேயென்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை; பெண்ணென்று தெரிந்திருந்தால்... நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறியிருக்குமே'' என்று வருத்தப்பட்டார் பெண் காவலர் ஒருவர்.செய்தியில் பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தை கவனித்தீர்களா?
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து, நேற்று காலை மீண்டும் விசாரித்தபோது, இது போன்று ஊர்வலமாக போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசி சேர்த்து வைப்பார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.ஒரு பெண் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டான் என்று ஒரு கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு மற்றொரு கையில் விஷ பாட்டிலை எடுத்துவந்து கலெக்டர் அலுவலகம், போலிஸ் கமிஷ்னர் அலுவலகம், நீதிமன்றம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என்று எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் மிரட்டினால் உடனே இந்த அலுவலகங்கள் தங்கள் பணியை மறந்து கல்யாணத் தரகர் வேலை பார்க்க ஆரம்பித்து விடும். உடனே அந்த காதலன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.
இதுபோன்ற தவறான நடைமுறைகளால் இளம் பெண்கள் ஈர்க்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்து தான் நினைத்ததை எவ்வழியிலாவது சாதித்துக்கொள்ளவேண்டும் என்று தவறான வழிமுறைக்குச் செல்கிறார்கள் என்பதைத்தான் இந்த செய்தி காட்டுகிறது.
இந்த செய்திகளையும் படித்தால் மேலுள்ள செய்திக்கு விளக்கம் புரியும்..