இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 24, 2011

குடும்பம் ஒரு கதம்பம் - இந்தியக் குடும்பம் 2020

இந்திய பொய் வரதட்சணை வழக்குகளால் பிரியும் தம்பதிகள் எந்தெந்த திசையில் செல்வார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் பின்வரும் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொய் வரதட்சணை வழக்குகள் உருவான பிறகு கணவனுக்கு நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக விவாகரத்து கொடுக்காது. அதனால் அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் வாழவேண்டியதுதான். பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண் வழக்கு என்ற பெயரில் போலிஸ் மற்றும் நீதித்துறையின் வலையில் சிக்கி ஆண்டுகளை கழிக்கவேண்டியதுதான். இதனிடையே தனிமைக்கு தீணி போட பலரும் வட்டமிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உருவாவதுதான் கள்ளக்காதல், கொலை போன்ற சம்பவங்கள்.

பொய் வரதட்சணை வழக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லையென்றால் “இந்தியக் குடும்பம் ஒரு கதம்பம்” போல மாறிவிடும். எந்தக் குழந்தைக்கு யார் அப்பன் என்று தெரியாது. யாருக்கு யார் மனைவி என்று தெரியாது. யாருக்கு யார் கள்ளக் காதலன் என்று தெரியாது. யாருக்கு யார் கள்ள மனைவி என்று தெரியாது. இதுதான் இந்தியக் குடும்பம் என்று உலகம் சொல்லும் அளவிற்கு நாடு உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்போதே விழித்துக்கொண்டால் இந்தியக் குடும்பங்களை காப்பாற்றலாம்.



சென்னை- வேலை தருவதாகக் கூறி, தகாத உறவு கொண்டு ஏமாற்றியதால், தொழில் அதிபரை கொன்றோம் என்று, தம்பதியினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சென்னை, நங்கநல்லூர், அபிலாஷ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த சந்திரசேகர், 55. கொசுவலை பொருத்தும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி, 45; வங்கி அதிகாரி. கடந்த 18ம் தேதி பணிக்குச் சென்ற கவுரி ஷிப்ட் முடிந்து இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் படுக்கையறையில், அவரது கணவர் சந்திரசேகர் பிணமாகக் கிடந்தார். டெலிபோன் ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட் என, எட்டு சவரன் நகைகள், வாட்ச் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் மாயமாகியிருந்தன.பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.

துணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் மேற்பார்வையில், தனிப்படைகள் அமைத்தனர். கொலை செய்ததாக சிவக்குமார், 36 மற்றும் கவிதா, 28 ஆகிய இருவரையும், பல்லடம் அருகே சின்னக்கரையில், கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சூரக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், வீட்டாருடன் தொடர்பற்றுப் போனது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்ற நிலையில், சிவக்குமார், அவினாசிக்கு வந்துள்ளார். அங்கு தான், புதுச்சேரி அருகில் உள்ள பாகூரைச் சேர்ந்த கவிதாவை சந்தித்துள்ளார். கணவனை பிரிந்து குழந்தையுடன், ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய கவிதாவை, திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

திருப்பூர், சிவகங்கையில் சரியான வேலை அமையாததால், சென்னையில் வேலை தேடியுள்ளனர். அப்போதுதான் சந்திரசேகரின் விளம்பரத்தை பார்த்து, கவிதா அதிலிருந்த எண்ணில், சந்திரசேகரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், கவிதாவை பலமுறை தொடர்பு கொண்ட சந்திரசேகர், வேலைக்கு வந்தால், அதிகளவில் சம்பளம் தந்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி காரைக்குடியிலிருந்து இருவரும் சென்னை வந்து, பணியில் சேர்ந்துள்ளனர்.

அன்று பிற்பகல் மனைவி வங்கிக்குச் சென்றதும், கவிதாவை அழைத்த சந்திரசேகர், பணமும், இருக்க இடமும் தருவதாகக் கூறி, கள்ள உறவு வைத்துக் கொண்டார்.இந்த உறவு பலமுறை தொடர்ந்துள்ளது. அடுத்த நாளும் அழைத்து உல்லாசம் அனுபவித்ததுடன், தனக்கு தெரிந்த வேறு ஒருவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ஒப்புக் கொள்ளாத கவிதா, அங்கிருந்து வெளியேறி, சிவக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அன்றிரவே, தங்களை ஏமாற்றிய சந்திரசேகரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, மறு நாள் காலை, 18ம் தேதி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து, சந்திரசேகரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, டெலிபோன் ஒயரைக் கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு, நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து தப்பிவிட்டனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.