இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 05, 2011

பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்யும் உதவி - யாராலும் தடுக்க முடியாது!!

ஏழைப் பெண்ணின் திருமண உதவித் திட்டத்திற்கு உதவிய பெண் அலுவலர்.

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
நவம்பர் 06,2011 தினமலர்


காட்டுமன்னார்கோவில் ;சிதம்பரம் அருகே, திருமண உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள். கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, தன் மகள் மாரியம்மாள் திருமணத்திற்கு, அரசின் உதவித் தொகை வழங்கக்கோரி, குமராட்சி ஒன்றிய சமூக நலத்துறையில், ஊர் நல அலுவலராக உள்ள மல்லிகாவிடம், மனு கொடுத்தார். அரசு உதவித்தொகை கிடைக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான், மனுவை அரசுக்கு பரிந்துரை செய்வதாக மல்லிகா கூறியுள்ளார். "நான் கூலித் தொழிலாளி, அவ்வளவு பணம் கொடுக்க இயலாது' எனக் கூறியும் கேட்காத அவர், பணத்தைக் கொண்டு வரும்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். இதனால் விரக்தியடைந்த கலியபெருமாள், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர், ரசாயனம் தடவிய பணத்தை கலியபெருமாளிடம் கொடுத்து, ஊர் நல அலுவலரிடம் கொடுக்கச் செய்தனர். அதன்படி, நேற்று கலியபெருமாள், ரசாயனம் தடவிய பணத்தை மல்லிகாவிடம் கொடுத்தார். அவரைப் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மல்லிகாவை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.