சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 25, 2011

புது மணப்பெண்ணின் காதலா! காதலாலா!!


சேலம்: ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த பெண் திருமண நாளன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கையிலேயே வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது.

இதையடுத்து அவர் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலியைக் கட்டிவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

வசந்தப்பிரியா தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். அதிகாலையில் பார்த்தால் மணப்பெண்ணைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்து ஓட்டம் பிடித்த வசந்தபிரியா தனது இன்னொரு காதலனான ரமேஷை பழினியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் தம்பதி சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார் தகராறு செய்தனர். அந்த 2 குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த விஷயத்தை மணமகன் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.