இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 13, 2011

வரதட்சணை சட்டங்களைப் பற்றி கிராமப்புறங்களில் விழிப்புணர்ச்சி தேவை!

வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்கள் பற்றியும் பல பெண்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை என்பது பின்வரும் செய்தியின் மூலம் தெரிகிறது.

நகர்ப்புறங்களில் இருக்கும் இந்த சட்ட விழிப்புணர்ச்சி கிராமப் புறங்களில் சரியாக பரவவில்லை போலிருக்கிறது!



விழுப்புரம் : கணவருக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம், குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன்; இவரின் மனைவி நிஷாந்தினி,24. இவர்கள், கடந்த 2004ல், காதல் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில மாதங்களில் அரிகரன், வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நிஷாந்தினிக்கும், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி,28, என்பவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நிஷாந்தினி, தன் முதல் திருமணத்தை மறைத்து, கடந்த ஜூன் 12ம் தேதி, விநாயகமூர்த்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், வெளிநாட்டிலிருந்து வந்த அரிகரன், மனைவி இரண்டாம் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தான் வாங்கிக் கொடுத்த பொருட்களைத் திரும்பத் தருமாறு, நிஷாந்தினியிடம் அவர் கேட்டபோது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

முதல் திருமணம் பற்றி விநாயகமூர்த்திக்குத் தெரிந்ததால், மனமுடைந்த நிஷாந்தினி, கடந்த 8ம் தேதி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கண்டமங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.