இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு பிறகு செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள்
கருத்துக்கள்...
"பெண்கள் மனோபாவம் மாறிவிட்டது!' சென்னையில் திருமண தகவல் மையம் நடத்தும், கீதா தெய்வசிகாமணி:
"இவர் தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ, துக்கமோ, இனி, இவர் கூடத்தான்...!' என்று, வருங்காலத் துணையைத் தன் பாதுகாப்பாக நினைக்கும் மனோபாவம், பெண்களிடம் போய்விட்டது. திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு, இன்று முற்றிலும் மாறிவிட்டது. இப்போது, பல பெண்கள் வேலை, "புராஜெக்ட்' என, வெளியூர், வெளிநாடுகளுக்குப் போய் வருவது, சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை வசதி, சுதந்திர மனப்பான்மை போன்றவற்றை, நம் கலாச்சாரத்திலும் எதிர்பார்க்கின்றனர்; தன்னை யாரும் பேச்சில் கூட கட்டுப்படுத்தக் கூடாது என நினைக்கின்றனர்.
இன்றைய பெண்களிடம், "இது நிச்சயம் வெற்றிகரமான திருமணமாக அமையும்' என்ற நம்பிக்கை இல்லை. நல்ல படிப்பு, நல்ல நிறு வனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் போன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கின்றன. எனவே, மணவாழ்க்கை, 40, 50 வயதிலும் சிறப்பாகவே இருக்கும் என நினைக்காமல், "உயரம் இரண்டு இன்ச்' கூடுதலாக எதிர்பார்க்கிறேன்; கலர் கொஞ்சம் பத்தாது' என, ஏதோ சினிமாவிற்கு ஹீரோவை தேர்ந்தெ டுக்கும் பாணியில், கணவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தனக்கு வரப்போகும் கணவர், நன்கு படித்து, வேலையில் இருக்கிறார்; நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு அவரது பெற்றோரின் பொறுமை, தியாகம், அன்பு தான் காரணம் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, "பேரன்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது' என்கின்றனர். முதலில், தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து, 20 - 24 வயதுகளில் திரு மணம் செய்து கொள் ளும் பெண்கள், நிச்சயம் வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வர் என்பதில் சந்தேகமில்லை!
1 comment:
ஒன்றை இழந்து தான் ஒன்றை பெறுகிறாய் மனிதனே .
Post a Comment