இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, December 08, 2010

சேவல் மீது புகார் கொடுத்த வழக்கறிஞரும், சேவலை சிறைப்பிடித்த காவல்துறையும்

இந்தியாவில் காவல்துறையும், சட்டம் படித்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள். சட்டத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள்! தவறுசெய்யும் கோழிகளை (மட்டும்) கண்டிப்பாக கடுமையாக தண்டிப்பார்கள். அதற்கு உதாரணம்தான் பின்வரும் செய்தி.

வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது'
தினமலர் 9/12/2010

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் பல சுவையான செய்திகள்:
அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)
அப்பாவி போலிஸ் (பகுதி - 3)

அப்பாவி போலிஸ் (பகுதி - 4)



=========




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.