தினமலர் 15/12/2010
கோவை : தனியார் கல்லூரி பஸ் டிரைவரை ஏமாற்றி, நான்காம் திருமணம் செய்து கொண்ட கேரள பெண், அவரையும் உதறிவிட்டு வேறு துணையுடன் ஓட்டம் பிடித்தார். விஷயமறிந்த டிரைவர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகேயுள்ள கிணத்துக்கடவு, ஏழூர், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணஹரி(27). சில ஆண்டுகளாக மினி பஸ் டிரைவராக வேலை செய்த இவர், சமீபத்தில் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணியில் சேர்ந்தார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி (25) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஆறு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து சென்ற காயத்ரி, வேறு நபருடன் சென்றுவிட்டார். இதனால், விரக்தியடைந்த சரவணஹரி, நேற்று முன் தினம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சரவணஹரியை திருமணம் செய்து ஏமாற்றிய காயத்ரி, அதற்கு முன் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது அம்பலமானது.இது குறித்து போலீசார் கூறியதாவது: டிரைவர் சரவணஹரியின் தற்கொலைக்கு காரணமான கேரளாவைச் சேர்ந்த காயத்ரி, ஏற்கனவே மூவரை திருமணம் செய்துள்ளார். காயத்ரியை முதலில் திருமணம் செய்த நபர் இறந்துவிட, இரண்டாவதாக வேறு நபரை திருமணம் செய்துள்ளார்; பிறகு, அவரும் இறந்து விட்டார். மூன்றாவதாக திருமணம் செய்த நபர், காயத்ரியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பிரிந்து சென்றுவிட்டார். இதையறியாத சரவணஹரி, நான்காம் நபராக காயத்ரியை மணந்துள்ளார். சில நாட்களிலேயே காயத்ரியின் நடத்தையில் சந்தேகமடைந்த சரவணஹரி எச்சரித்துள்ளார். இதனால், இவரையும் விட்டுவிட்டு, ஐந்தாவதாக வேறு நபருடன் அவர் சென்று விட்டார். ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்த சரவணஹரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
=========
இந்தப் பெண்மணியின் சாதனை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று கணவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். போலிசிற்கு கொஞ்சமும் சந்தேகமே வரவில்லை. நல்ல புத்திசாலியானப் பெண்மணி!
மேலுள்ள செய்தியில் திருமணமாகி 6 மாதத்திற்குள் கணவன் தற்கொலை செய்துகொண்டார். அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இதுவே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டால் (இயற்கை மரணமாக இருந்தாலும்) அது வரதட்சணைக் கொலையாக கருதப்பட்டு போலிஸ், RDO விசாரணை செய்து கணவனையும் அவனது குடும்பத்தாரையும் விசாரணை என்ற பெயரில் கைதியாக சிறையில் அடைத்துவிடுவார்கள். பெண்ணின் பெற்றோர் கொஞ்சம் “லஞ்சம்” கொடுத்தால் போதும் அவ்வளவுதான் வழக்கு உறுதிசெய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி குற்றப்பத்திரிக்கை தயார் செய்து கணவனை நீதிமன்றதில் சந்தி சிரிக்கவைத்து நடைபிணமாக மாற்றிவிடுவார்கள். இதுதான் இந்திய நடைமுறை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!
1 comment:
ஹஹாஹா
Post a Comment