சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 31, 2010

பிறந்த குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்தது யார்?

பின்வரும் வீடியோவையும், அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.
மேலுள்ள வீடியோவில் யாரோ பெற்ற பிள்ளைக்கு தனது நன்றிக் கடனை செலுத்தும் வகையில் மிகுந்த பாசத்துடன் ஒரு நாய் வேடிக்கை விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் பின்வரும் செய்தியில் பெற்ற சிசுவை யாரோ மிகுந்த பாசத்துடன் உயிரோடு மண்ணில் புதைத்திருக்கிறார்கள். பெண்ணின் துணையில்லாமல் குழந்தை பிறக்கமுடியாது என்ற முக்கியமான விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.


பெரம்பலூர் : பெரம்பலூரில், பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தார் கல் நெஞ்ச தாய். அக்குழந்தையை பெண் ஒருவர் உயிருடன் மீட்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் வேல்முருகன் (14). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். வேல்முருகன் நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள, பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றான்.அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த மண் முகட்டில் நாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன், "நாய் குட்டி போட்டிருந்தால் ஒரு குட்டியை எடுத்துச் சென்று வளர்க்கலாம்' என, நினைத்து அங்கு சென்று பார்த்துள்ளான். அப்போது, அங்கு குழந்தையின் தலை மட்டும் வெளியில் தெரிந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (40) என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தை மூக்கில் மட்டும் லேசான காயத்துடன் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தது."குழந்தை இல்லாத தனக்கு ஆண் குழந்தை கிடைத்து விட்டது' என, சந்தோஷப்பட்ட முத்துலட்சுமி இக்குழந்தையை மீட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று குளிப்பாட்டி, பவுடர் போட்டு அலங்கரித்து வைத்திருந்தார்.


பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் சம்பவ இடம் வந்து முத்துலட்சுமியிடம் இருந்த அக்குழந்தையை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள "அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில்' சேர்த்தார்.

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, குழந்தையை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?, புதைக்கப்பட்ட குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து விசாரிக்கிறார்.பிறந்த மூன்று நாட்களே ஆன குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கல் நெஞ்ச கொண்ட தாயை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

============

பண்பாடு, கலாச்சாரம், மன்னாங்கட்டி என்று புரளி பேசித்திரியும் நாட்டில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

தாயுள்ளம் என்பது ஆண், பெண், விலங்கு என்று யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்ற உருவத்திற்குள் மட்டும்தான் எப்போதுமே தாயுள்ளம் இருக்கும் என்று சொல்லக்கூடாது. அதனால் சட்டங்கள் தாய்மையை மதிப்பதாக இருந்தால் ஆண், பெண் என்ற உருவ வேறுபாட்டின் அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான தாய்மைக்கு பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கும். அதுவரை பெண் என்ற உருவில் பேய் கூட சட்டங்களின் துணையோடு வன்முறை செய்துகொண்டிருக்கும். யாரும் அவற்றை இனம்பிரித்துக் கண்டறிய முடியாது.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.