குளித்தலை : மைனர் பெண்ணைக் கடத்தியதால், நிபந்தனை ஜாமீனில் கையொப்பமிட்டவரிடம், வழக்கை மாற்றி பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த, இசக்கிமுத்து மகன் ஆனந்த்(26). கரூர் மாவட்டம், குளித்தலை கலப்புகாலனியில் வசிக்கும் அவர், அக்கா அன்னசெல்வியின் வீட்டில் கடந்த சில ஆண்டாக தங்கியுள்ளார். இதே பகுதியில் வசிக்கும் வேலுசாமி மகள் அனிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது); திருச்சி ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி. இவர் தினசரி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது, அனிதாவுக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது. கடந்த ஜூன் 6ம் தேதி பள்ளிக்கு சென்ற அனிதா, வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம், வேலுசாமி புகார் அளித்தார். புகாரை பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் மறுத்ததால், கரூரில் அப்போதைய எஸ்.பி., தினகரனிடம் முறையிட்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை 9ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில், அனிதா மற்றும் ஆனந்தை கண்டுபிடித்து கடந்த மாதம் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் மகளிர் போலீசார் ஆஜர் செய்தனர். அனிதா, "மைனர்' என்பதால், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனந்த் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நாள்தோறும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆனந்த் கையொப்பமிட்டுவந்தார். அனிதாவை தன்னுடன் சேர்த்துவைக்க இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம் ஆனந்த் கேட்டுள்ளார். அப்போது, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடாமல் இருக்க, பதிவான வழக்கை பொய் வழக்காக மாற்றித் தருவதாகவும், இதற்கு 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு கம்பளி ஸ்வெட்டர் தனக்கு வாங்கித் தருமாறும் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி கேட்டுள்ளார். லஞ்சம் அளிக்க மனமில்லாத ஆனந்த், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று காலை புகார் அளித்தார். போலீசார் வழிகாட்டுதலின் படி, நேற்று மாலை 3.45 மணிக்கு குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம் 5,000 ரூபாய் மற்றும் இரண்டு ஸ்வெட்டரை அளித்தார். இன்ஸ்பெக்டர் வரலட்சுமி அவற்றை பெற்றுக்கொண்டதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில், இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=====
குடும்பப் பிரச்சனைகளை மென்மையாகக் கையாளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்குக் கிடைத்துவிட்டால் போதும் இங்கு இருப்பவர்கள் ஒன்று கூடி கும்மியடித்துப் பாட்டுப்பாடி ஏமாந்த கணவன் வீட்டாரிடம் முடிந்தவரை கறந்துவிடுகிறார்கள். அதே சமயம் பொய்வழக்குக்கொடுக்கும் கயவர்களிடமிருந்தும் பணத்தைக் கறக்க மறந்துவிடுவதில்லை. இதுதான் இன்று பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்துகொண்டிருக்கும் அவலம்.
இந்த அவலத்தை சென்னை உயர்நீதிமன்றம் 2008ல் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து மகளிர் காவலர்களுக்கு காக்கியை மாற்றி வேறுவித நிற சீருடை கொடுக்கவேண்டும், மென்மையான குடும்பப் பிரச்சனைகளை எப்படி சரியாகக் கையாளவேண்டும் என்று பயிற்சி அளிக்கவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல் அதை காதில் வாங்கிக்கொள்வதற்கு ஆள் இல்லை!
2. In respect of suggestion Nos.8 and 11 made by this Court; in the letter, dated 01.08.2008, of the Director General of Police, it has been stated as follows:-
" 2) With regard to the suggestion No.8, i.e., "A different Uniform other than the regular one may be recommended for these police officers" - the matter requires deliberations at length with Senior Police Officers in the State. All the Senior Officers have been addressed to send their view on the subject. After obtaining their views the matter will be discussed at State Headquarters and a report in this regard will be sent.
3) With regard to suggestion No.11 - Director General of Police, Training has been addressed to initiate action to conduct Education programme for Police Officers on the objects of the legislation, judicial pronouncements and development of law. Further progress report will be sent. "
It must also be pointed out that though several such suggestions and instructions were earlier made/issued in that perspective by the Honourable Supreme Court as well as this Court, there was no expected progress or outcome since, in course of time, the system started trailing with the same deviation and anomalies to reform/correct which the instructions were issued. At least now, this Court is anxious to see that the directives are strictly followed perpetually with letter and spirit by the Investigating Officers of the Department in particular the officers posted at the All Women Police Stations.
No comments:
Post a Comment