இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, December 12, 2010

யாருக்கு யாரோ? கடைசியில் அல்வா யாருக்கு?

காதலனுடன் ஓட்டம் பிடித்தார் மணப்பெண்
தினகரன் 13/12/2010

ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல்நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.

மணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.

மணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

============

இதை ஒரு ஆண் செய்திருந்தால் அவன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு, கற்பழிப்பு வழக்கு என பல பிரிவுகளில் கூலிப்படை பாய்ந்திருக்கும். இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தியாவில் கொடுக்கப்படும் சலுகைகள். இதற்கு இன்னொரு பெயர்தான் “சமஉரிமை”, “பெண் சுதந்திரம்”, “Women Empowerment”.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.