சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 28, 2010

குழந்தை பிறக்க திருமணம் அவசியமா?

அதிசயம் இல்லை. ஆனால் உண்மை!

பெண்ணுக்கு பிறந்த குழந்தை
டிசம்பர் 27,2010 தினமலர்

திண்டுக்கல் : நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிக்கு நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். தனது மகளுக்கு ஆசிரியர் வேலை வேண்டி மதுரை பசும்பொன் நகரை சேர்ந்த தனுஷ்கோடி, அவரது மகள் லட்சுமிதேவி, விளாங்குடி ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தர்ராஜ் ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளார். வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது குறித்து சுப்புராஜ் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மேற்கண்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தனுஷ்கோடி, சுந்தர்ராஜ் இருவரும் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். லட்சுமி தேவி நிலக்கோட்டை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய், குழந்தை இருவரும் நேற்று ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

=========

திருமணம் இல்லாமல் ஏற்படும் கருவுருதலுக்கு அரசாங்க சிறப்பு நிதியுதவி கிடைக்குமா? பெண்கள் அமைப்புகள் ஏதாவது ஏற்பாடு செய்துதருவார்களா?

யார் யாரோ செய்கின்ற தவறுக்கு சிறு குழந்தைகள் சிறைக்குச் செல்வதும், தந்தையற்ற அனாதையாவதும் சாதாரணமாகிவிட்டது. பல பொய் வழக்குகளிலும் இப்படித்தான் பல குழந்தைகள் தந்தை இருந்தும் சட்டத்தின் துணையோடு அனாதைகளாக மாற்றப்படுகிறார்கள். இந்தப் பாவங்கள் சும்மா விடாது இந்த நாட்டை.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.