இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 30, 2010

குழந்தை பிறப்பதற்கு திருமணம் அவசியமா? - பகுதி 2

குழந்தை பிறக்க திருமணம் அவசியமா? - பகுதி 2

இந்தியாவில் நடக்கும் அதிசயங்கள் பல. அவற்றில் பெண்ணுக்கு அதிசயம் நடந்தால் அது மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயமல்லவா? எங்கோ ஒரு குடிகாரன் தனது மனைவியை அடித்தால் உடனே நாடெங்கும் உள்ள எல்லாப் பெண்களும் தினம் தினம் தங்களது கணவனாலும் அவனது குடும்பத்தாலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஒரு புது சட்டமே எழுதிவிடுகிறார்கள்.

Friday, Dec 24, 2010 The Hindu

“Our organisation (All India Democratic Women Association) has dealt with, and continues to deal with, several thousand complaints of dowry harassment, dowry death and domestic violence on a daily basis. It would have been more relevant to consider strengthening of the dowry laws to ensure that women live a life free from violence.”

எங்காவது ஒரு பெண்ணுக்கு எது நடந்தாலும் அதை பிரபலப்படுத்தி அதை ஒரு சிறப்பான செய்தியாக்கி பூதாகாரமாக மாற்றி பணம் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் பெண்ணடிமைவாதிகளின் அடிப்படைக் கொள்கையாகும். அதன் அடிப்படையிலேயே பின்வரும் செய்தியையும் படித்து மகிழுங்கள்!


தினமலர் டிசம்பர் 29,2010

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.