இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, December 29, 2010

பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் நடக்காது

பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் எந்த செயலும் நடக்கமுடியாது. நல்ல காரியம் ஆனாலும் சரி, கள்ளக்காதலில் கணவனைக் கொல்வதானாலும் சரி. எல்லாவற்றிலும் பெண்ணின் பங்கு இருக்கிறது. ஆனால் குற்றம், வழக்கு, சட்டம் என்று வரும்போது பெண்கள் ஏதோ அப்பாவி போல சித்தரிக்கப்பட்டு சட்டங்கள் ஆண்களை மட்டும் தண்டிப்பது ஏன்? குறிப்பாக வரதட்சணை சட்டங்களில் தான் திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்ததாகக் கூறி ஒரு பெண் 10 ஆண்டுகள் கழித்து வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன் மீது வரதட்சணை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தவுடன் வரதட்சணைக் கொடுத்த பெண்ணையும் தண்டிக்காமல் அவர் கொடுக்கும் புகாரில் இருக்கும் கணவனை மட்டுமே தண்டிக்கிறார்களே அது ஏன்? வரதட்சணை பரிவர்த்தனை என்ற குற்றம் நடக்க கொடுப்பவர் பெறுபவர் என்ற இரண்டு குற்றவாளிகள் தேவை. ஆனால் தண்டனை என்று வரும்போது “பெண்” என்ற ஒரே காரணத்திற்காக வரதட்சணைக் கொடுத்த குற்றவாளியை விட்டுவிடுகிறார்களே அது ஏன்? எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவேண்டும். அதுதான் சரியான பெண் சுதந்திரம். இல்லையென்றால் அதற்குப்பெயர் “பேடித்தனம்”.

பின்வரும் செய்தியில் பெண்ணின் பங்களிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் : மதுரை கோர்ட் தீர்ப்பு
தினமலர் டிசம்பர் 30,2010

மதுரை : மதுரையில் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர், தள்ளுவண்டியில் சர்பத் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி (30). இவர்களுக்கு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சக்திவேல் (20). இவர், முருகேசனிடம் வேலை பார்த்தார். இவருக்கும், வேளாங்கண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்களை முருகேசன் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.

கடந்த 2009 செப்.,25ல் இரவு 11 மணிக்கு தனது வீட்டில் வேளாங்கண்ணியும், சக்திவேலும் ஜாலியாக இருந்தனர். அதை, முருகேசன் கதவு துவாரம் வழியாக பார்த்து அதிர்ந்தார். கதவை தட்டியும் திறக்கவில்லை. ஓடுகளை பிரித்து முருகேசன் வீட்டிற்குள் குதித்தார். தயாராக இருந்த வேளாங்கண்ணி, முருகேசனை பிடித்து கொள்ள, அவரது கழுத்தை சக்திவேல் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

உடலை, தள்ளுவண்டியில் படுக்க வைத்து, கள்ளக்காதல் ஜோடி பெருங்குடி சுடுகாட்டிற்கு எரிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் சென்றனர். சுடுகாட்டிற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மடக்கினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இருவரையும் பெருங்குடியின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்தார்.இவ்வழக்கு மதுரை இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி. அன்புசெல்வன் ஆஜரானார். வேளாங்கண்ணி, சக்திவேல் ஆகியோருக்கு தலா ஆயுள் சிறை தண்டனை, தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜி. தனராஜ் உத்தரவிட்டார். வேளாங்கண்ணி திருச்சி சிறையிலும், சக்திவேல் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.