சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, December 20, 2010

காதலுக்கு இது புதுசா?

காமம் ஒருபடி மேலே சென்று நன்றாகவே வளர்ச்சியடைந்திருக்கிறது.
இந்தியாவில் பொய் கற்பழிப்பு வழக்குகள் இப்படித்தான் உருவாகின்றன.

திருமணத்துக்கு வற்புறுத்தி துப்பாக்கியுடன் காதலனின் வீடு புகுந்து நர்ஸ் மிரட்டல்
தினகரன் 12/21/2010

மார்த்தாண்டம் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியாபதி (24). விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை நர்ஸ். மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (28). சென்னை அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் டிரைவராக உள்ளார். சத்தியாபதியின் அண்ணன் கதிரேசன் அதே கம்பெனியில் டிரைவராக உள்ளார். சத்தியாபதி அடிக்கடி செல்போனில் அண்ணனுடன் பேசுவது வழக்கம். அப்போது, செல்வகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கிடையே திடீரென கடந்த சில தினங்களாக செல்வகுமார், சத்தியாபதியுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால், நேற்று காலை சத்தியாபதி மார்த்தாண்டத்தில் உள்ள காதலன் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்த அவரது தாயாரிடம் தனக்கு செல்வகுமாரை திருமணம் செய்து வைக்குமாறு கூறினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்தியாபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி துப்பாக்கியை எடுத்து காட்டினார். திடீரென அறைக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார். அங்கு மின்விசிறியில் தூக்குபோட முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார், அவரிடம் இருந்த போலி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சத்தியாபதி கூறுகையில், ‘’செல்வகுமார் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றார். இதில் நான் கர்ப்பமானேன். பின்பு கருக்கலைப்பு செய்தேன். இது ஊரில் எல்லோருக்கும் தெரியும். செல்வகுமாருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்ப்பதாக தகவல் கிடைத்தது. நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. எனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளேன்’’ என்றார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.