இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 07, 2010

பெண்கள் செய்யும் கட்டுப்படுத்தமுடியாத சாதனைகள்


காசியாபாத் : நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக, உ.பி., முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவுக்கும், பிரபல தொழில் அதிபர் அசோக் சதுர்வேதிக்கும், தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.

உ.பி., மாநில முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவ். முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது, இவர் தலைமைச் செயலராக இருந்தார். ஏழு ஆண்டுக்கு முன், நொய்டா பெருநகர வளர்ச்சிக் குழு தலைவராக பதவி வகித்தார். அப்போது, தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை மீறியதாகவும், தனது பெயரில் 300 ச.மீட்டர் நிலத்தை ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த 300 ச.மீட்டர் நிலத்தை பின், 450 ச.மீட்டராக அதிகரித்துக் கொண்டதாகவும் நீரா யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீராவின் மகள்கள் சன்ஸ்கிரிதி, சுக்ரிதி ஆகியோர் பெயரிலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

விதிமுறைகளை பொருட்படுத்தாமல், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் நிலத்தை ஒதுக்கீடு செய்ததும் தெரியவந்தது. விதிமுறைகளை மீறி, நிலத்தை பெற்றதாக பிளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., தலைவர் அசோக் சதுர்வேதி மீதும், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோர்ட் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. நீரா யாதவ், அசோக் சதுர்வேதி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, தனது உடல் நிலையை காரணம் காட்டிய நீரா யாதவ், அமர்வதற்கு இருக்கை வேண்டும் என, கேட்டார். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஏ.கே.சிங்., தீர்ப்பை வாசிக்கத் துவங்கினார். இதில், கைலாஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான முதல் வழக்கில் நீரா யாதவை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட நீரா யாதவ் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இதையடுத்து, அடுத்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீரா யாதவுக்கும், அசோக் சதுர்வேதிக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

கதறி அழுதார்
: தீர்ப்பைக் கேட்ட நீரா, கதறி அழுதார். நீராவும், அசோக் சதுர்வேதியும் தஸ்னா மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில், சதுர்வேதி அழைத்துச் செல்லப்பட்டார். நீரா யாதவ் மற்றும் சதுர்வேதிக்காக ஜாமீன் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் வக்கீல்கள் தெரிவித்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்பு, உ.பி.,யில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் நீரா யாதவ் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், 1997ல் உ.பி.,யைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சார்பில், ஊழல் செய்த அதிகாரிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நீரா யாதவ் அதிக ஊழல் செய்பவர் என்ற அடைமொழியுடன் இடம் பெற்றிருந்தார். மேலும், அதிக ஊழல் செய்தவர் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டும் அவரைத் தலைமைச் செயலர் பதவியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது. தவிரவும், முன்பு சி.பி.ஐ., டைரக்டராக இருந்த ஜோகிந்தர் சிங் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இது. அதுவும் பெண் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ஊழலில் சம்பந்தப்பட்டதை ஆய்வு செய்யும் வழக்காக இருந்தது. நேற்று இத்தீர்ப்பு குறித்து ஜோகிந்தர் கருத்துக் கூறுகையில், "இது நல்ல துவக்கம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்ததில் மகிழ்ச்சி' என்றார்.

============

வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டிவைக்காதீர் என்று சொன்ன பாரதி இப்போது மீசையை முறுக்கிக் கொண்டு என்ன சொல்லியிருப்பார்?




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.