குறிப்பாக படித்த நவநாகரீக மங்கைகள் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கி வருகிறார்கள். இந்த கேவலமான நிலையைப் பற்றி நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. உயர்கல்வி கற்ற ஒரு பெண் தனது திருமணத்தில் தான் வரதட்சணை கொடுத்ததாகக் கூறி திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை வழக்குப் போடுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு கள்ளக்காதல் அல்லது வேறு ஏதாவது ஒரு வஞ்சகத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதை மறைப்பதற்காக போடப்படும் “அப்பாவிப் பெண்” வேஷத்திற்கு போட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் முகமூடிதான் “வரதட்சணைக் கொடுமை”. இதைப் பலமுறை பல நீதிமன்றங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன.
பெண்கள் நாட்டின் கண்கள். அதிலும் இந்தியாவில் பல “குருட்டுக் கண்கள்” இருந்துகொண்டுதான் இருக்கின்றன! அதற்கேற்ப சட்டங்களும் குருட்டுத்தனமாகத்தான் ஒருதலைபட்சமாக இருக்கின்றன. உண்மையான பெண்களுக்கு என்றுதான் மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் கொடுப்பார்களோ?
தாய்மையைப் பயன்படுத்தி நேற்று வந்த பொய்யான செய்தி 1
மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக கிணற்றில் வீசி குழந்தை கொலை வழிப்பறி கொள்ளையர் ஓட்டம்
19/12/2010 தினகரன்
19/12/2010 தினகரன்
பொள்ளாச்சி: ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்த பைக் கொள்ளையர்கள், அவரது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி விட்டு தப்பினர். இதில், குழந்தை பரிதாபமாக இறந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (27). அதே பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனமலையை அடுத்த தாத்தூரிலுள்ள ஒரு கம்பெனியில் பிட்டராக தர்மாராஜ் பணியாற்றி வருகிறார். இவர்கள் தாத்தூரிலேயே வசித்து வருகி ன்றனர்.
ஆனமலைக்கு சென்று விட்டு நேற்று மதியம் தாத்தூர் திரும்பிய காளீஸ்வரி, தனது ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென காளீஸ்வரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலியை பறித்தனர். காளீஸ்வரி ‘திருடன் திருடன்’ என அலறியதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள், காளீஸ்வரியின் கையில் இருந்த குழந்தை சவுந்தர்ராஜனை பிடுங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட்டனர்.
பொதுமக்கள் சிலர் அவர்களை பிடிக்க விரட்டினர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கொள்ளையர்கள், கையில் இருந்த குழந்தையை அங்குள்ள பொது கிணற்றில் வீசி எறிந் தனர். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.
படுகாயமடைந்த குழந்தையை ஆனமலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து, ஆனமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
======
முகத்திரையைக் கிழித்துக்காட்டும் இன்றைய உண்மை செய்தி 2
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாத்தூரை சேர்ந்த தர்மராஜ் மனைவி காளீஸ்வரி(24). இவர் நேற்று மதியம் ஆனைமலைக்கு சென்றுவிட்டு, ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு கிணறுக்கு சற்று தொலைவில் திடீரென காளீஸ்வரி கூச்சல் போட்டார். பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தனது 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டதாகவும், குழந்தையை கிணற்றில் வீசி சென்று விட்டதாகவும் கூறி கதறி அழுதார்.
ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பைக்கில் வந்த வாலிபர்கள் பற்றி விசாரித்தபோது காளீஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம் காளீஸ்வரி கூறியதாவது: நானும் தர்மராஜும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் இருவரது பெற்றோரும் எங்களை ஒதுக்கி வைத்தனர். எனது பெற்றோர் என்னை பார்க்க வருவதில்லை. இதனால் மனம் உடைந்தேன். ஒரு ஜோதிடரிடம் கேட்டபோது, இந்த குழந்தை பிறந்தநேரம் சரியில்லை. அதனால்தான் குடும்பத்துடன் சேர முடியவில்லை என தெரிவித்தார். பெற்றோரிடம் சேருவதற்காக குழந்தையை கிணற்றில் வீசினேன் என்று கூறி உள்ளார்.
இதுபோன்ற வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் பொய்வழக்குப்போட கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். தங்களை அபலைப்பெண்ணாக காட்டிக்கொள்வதற்காக தயங்காமல் எந்த வேஷம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்வார்கள். அதன்விளைவாக வெளிப்படுபவைதான் அப்பாவிகள் மீது போடப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகளும், பொய் கற்பழிப்பு வழக்குகளும்.
1 comment:
என்ன பாஸ் விதிவிலக்குகளை தேடிப் பிடிச்சு துவைச்சு காய போட்டிருக்கிங்க
பெண்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன். கீழ் காணும் பதிவிலிருந்து அடுத்தடுத்த பதிவுகளை படிங்க.
மாத்தி யோசிங்க. நீங்க சொல்றதும் உண்மைதான். ஆனால் அது மட்டும் உண்மையில்லை.
http://kavithai07.blogspot.com/2010/12/blog-post.html
Post a Comment