இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 17, 2010

பேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்

எல்லா இளம்பெண்களுமே அப்பாவிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதுபோல கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் குற்றம்சாட்டி வரதட்சணை வழக்கு தொடுக்கும் எல்லா பெண்களும் உண்மையாகவே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவும் முடியாது. கீழுள்ள செய்தியைப் படித்தபிறகாவது நம்புங்கள். ஆனால் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் மட்டும் எல்லாப் பெண்களுமே குற்றம் செய்யத் தெரியாதவர்கள் என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி ஒருதலைபட்சமாக இருக்கிறது!

ஓடும் பஸ்சில் ரூ.12 லட்சம் அபேஸ் செய்த 2 பெண்கள்

தினமலர் 18/12/2010

புதுச்சேரி:பஸ்சில் பயணம் செய்த, ஓய்வுப் பெற்ற ஏட்டிடம் 12 லட்சம் ரூபாயை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி காமராஜர் நகரில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதன்(40). இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு முருகா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென கூறியுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததை ஆட்டோ டிரைவர் கவனித்தார். மருத்துவமனை எதிரில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தனவந்தரிநகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இரு பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டு, கட்டாக 12 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த ரேகா(23), சூரியா(25) என்பதும், சென்னையில் இருந்து அரசு பஸ்சில் புதுச்சேரிக்கு வந்தபோது, சக பயணியிடம் 12 லட்சம் ரூபாயை திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையில் கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஏட்டு கலியபெருமாள்(60), பஸ்சில் பயணம் செய்த தன்னிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டதாக தன்வந்தரி நகர் போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 12 லட்ச ரூபாய் பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

டிரைவருக்கு பாராட்டு: தன்வந்தரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பணத்தை திருடிய பெண்கள் தொடர்பாக சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து உதவிய ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சீனியர் எஸ்.பி., அதுல் கத்தியார், தெற்கு பகுதி எஸ்.பி., நந்தகோபால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆட்டோ டிரைவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினர்.



3 comments:

அங்கிதா வர்மா said...

இப்படியும் பெண்களா? என்னத்தை சொல்ல. குற்றம் செய்வதில் ஆண்களுக்கு இணையாக, ஒரு படி மேலாகவே பெண்கள் செல்கின்றனர்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

மிக்க நன்றி அங்கிதா வர்மா.

குற்றம் புரிவதில் ஆண்,பெண் என்ற பேதமே கிடையாது. இரண்டுமே மனித இனம். இரண்டிற்குமே மனிதத்திற்குரிய அனைத்து நல்ல, தீய குணங்களும் உண்டு.

பெண் என்றால் குற்றம் செய்யமாட்டாள். ஆண் மட்டும்தான் குற்றம் செய்பவன் என்ற தவறான எண்ணம் மக்களிடையே மேலோங்கியிருப்பதால்தான் இதுபோன்ற ஆண், பெண் என்று வேறுபடுத்தி குற்றங்களை ஒப்புமை செய்யத் தோன்றுகிறது.

Unknown said...

இக்கால பெண்கள் ஆணுக்கு பெண் சமம் என்னும் கூற்றை அயோக்கியத்தனங்களை செய்வதில் மட்டுமே நிரூபித்து வருகிறார்கள் . உயிரை பணயம் வைத்து தேசத்தின் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்பு போன்ற மற்ற விசயங்களில் ஆண்களுடன் எந்த இட ஒதுக்கீடும் இவர்கள் கேட்பதில்லை.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.