இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 28, 2010

பெண்ணால் இ(எ)துவும் செய்யமுடியும்

ஒரு பெண் நினைத்தால் எதுவேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதற்கு கீழுள்ள செய்தி நல்ல உதாரணம்.

ஆண் வேடமிட்டு கடையில் வேலை செய்து நான்கரை லட்ச ரூபாய் லபக்கிய பெண் கைது
தினமலர் ஆகஸ்ட் 28,2010

கொல்லம் : ஆண் வேடமிட்டு டைல்ஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்து கடை உரிமையாளரை நம்ப வைத்து நான்கரை லட்ச ரூபாய் லபக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் கொட்டியம் பகுதியில், "ஆப்ஸ் டைல்ஸ்' என்ற கடையை நடத்தி வருபவர் சியாத். இவரது கடையில் பணியாற்ற ஆட்கள் தேவை என நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். அவ்விளம்பரத்தை பார்த்து விட்டு கொல்லம் அடுத்த அம்மச்சி வீடு சந்திப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(26) என்பவர் விண்ணப்பித்தார்.

நேர்முகத் தேர்வுக்கு தனது பெற்றோருடன் சென்ற அவரை கடை உரிமையாளருக்கு பிடித்துப் போக, அவருக்கு அங்கு வேலை கிடைத்தது. கடுமையாக உழைத்து உரிமையாளரின் நன்மதிப்பை பெற்ற அவர், கடையில் கொடுக்கல், வாங்கலில் இருந்து பல முக்கிய பணிகளையும் செய்து வந்தார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கடையில் இருந்து நான்கரை லட்ச ரூபாயுடன் ஸ்ரீகாந்த் மாயமாகி விட்டார். அவரை தேடி கடை உரிமையாளர் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பெற்றோருக்கு மகன்கள் இல்லை என்பதும் மூன்று மகள்கள் தான் என்பதும் முதல் அதிர்ச்சியாக இருந்தது.மேலும், அவரது கடையில் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஆண் அல்ல என்பதும், அவ்வீட்டில் ராணி என்ற பெயரில் வளர்ந்து வந்த பெண் என்பதும் தெரிந்தது. ஆண் வேடமிட்டு தனது கடையில் பணியாற்றி பண மோசடி செய்ததும் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அப்புகாரின்படிபோலீசார் விசாரித்து, ராணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

================


இப்படித்தான் பல பெண்கள் அப்பாவி மருமகள் போல வேஷமிட்டு பொய் வரதட்சணை வழக்குகளைப் பதிவு செய்து பல அப்பாவிக் குடும்பங்களை நாசமாக்குகிறார்கள். அதனால் பெண்கள் பலகீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வெற்றுப் பிரச்சாரங்கள்தான் என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண் நினைத்தால் எதையும், எப்படி வேண்டுமானாலும் செய்து தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். குறிப்பாக வரதட்சணை மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களை எப்படி தங்களுக்கேற்றவாறு கையாளவேண்டும் என்பதில் பல படித்த மேல்தட்டுவர்க்கப்பெண்கள் ரொம்ப கைதேர்ந்தவர்கள்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.