இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 03, 2010

ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்த அரிய உதவி!

சிறுசேமிப்புத் துறை அதிகாரி பணத்தை எப்படி பெரிய அளவில் சேமிப்பது என்று செயல்முறை விளக்கம் கொடுத்திருக்கிறார்!

சிறுசேமிப்பு பிரதிநிதியாக இருந்து சுயமாக உழைத்து சம்பாதிக்க நினைத்த ஒரு பெண்ணுக்கு, அதிகாரியாக இருக்கும் மற்றொரு பெண் வழிகாட்டியாக இல்லாமல் எப்படி நடந்திருக்கிறார் என்று பாருங்கள். பெண்ணால்தான் மற்றொரு பெண்ணுக்கு ஆபத்து. ஆனால் இந்திய சட்டங்கள் ஆண்கள்தான் எப்போதும் பெண்களை துன்புறுத்துவதாக சொல்கிறது.

எங்கும் பெண்கள்! எதிலும் பெண்கள்!! ஆணுக்குப் பெண் சளைத்தவர் அல்லர். எத்துறையிலும் நன்றாகவே முன்னேறிவிட்டார்களே!

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்

திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசன்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரும், கலெக்டர் நேர்முக உதவியாளருமான திலகமணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.






1 comment:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆணுக்கு பெண் நிகர்..

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.