ஆகஸ்ட் 03,2010 தினமலர்
புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.
ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.
மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.
இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்
உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.
பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.
தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.
Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.
No comments:
Post a Comment