பெரம்பலூர்: சொத்தை எழுதித்தர மறுத்த கணவனை, இரும்பு சுத்தியால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரத்தின் (50) மனைவி பெரியம்மாள் (43). பெரியம்மாளுக்கு சிதம்பரம், இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் பெயரில் உள்ள சொத்தை, குழந்தைகள் பெயருக்கு எழுதி தருமாறு, பெரியம்மாள் கணவரிடம் கேட்டுள்ளார். "மூன்று பிள்ளையும் எனக்கு பிறக்காததால், நிலத்தை எழுதித்தர முடியாது' என, சிதம்பரம் மறுத்தார். இதை, தன் தாய் செல்லம்மாளிடம் தெரிவித்தார் பெரியம்மாள். இதைக்கேட்ட அவர், "சிதம்பரம் உயிருடன் இருக்கும் வரை, சொத்து கிடைக்காது. இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து விடலாம்' என, கூறியுள்ளார். ஏப்., 23, 2007ம் ஆண்டு, இரவு 9 மணிக்கு, வீட்டுக்கு அருகே மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில், தூங்கிக் கொண்டிருந்த சிதம்பரத்தை, இருவரும் சேர்ந்து இரும்பு சுத்தியால், தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சிதம்பரத்தை, அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் வி.ஏ.ஓ., பெருமாள்சாமி, மங்கலமேடு போலீசில் அளித்த புகாரின்படி, இருவரையும் கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். பிறகு, இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "சிதம்பரத்தை கொலை செய்த பெரியம்மாள் மற்றும் இவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றார்.
=================
பணத்திற்காக எதுவும் செய்பவள்தான் கலிகாலத்துப் பெண்ணா? ஆனால் அதையும் நன்றாகத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள்.
1 comment:
CLICK THE LINK AND READ AND PASS IT TO YOUR FRIENDS
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
.....
Post a Comment