சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 10, 2010

ரொம்ப சிக்கலான காதல்

இந்த காதல் கதையைப் படித்தால் தலை சுற்றுகிறது. படித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள். தாயும் மகளும் சேர்ந்து உருவாக்கிய காதல் சித்திரம்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (55). பிஸ்கட் வியாபாரி. இவரது மனைவி அனிதா (42). இவர்களது மகள்கள் அர்ச்சனா (22), அஸ்வினா (21). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக, பிரேம்ராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இளைய மகள் அஸ்வினா கணவனுடன் கேரளாவில் வசிக்கிறார்.

மூத்த மகள் அர்ச்சனா, கணவர் லாரன்சிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு, தாயுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மதன் (18). கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அர்ச்சனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. மதன் தனது சகோதரர் பிரபாகரன் (20) என்பவருடன், அர்ச்சனா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரபாகரனுக்கும், அனிதாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. சகோதரர்கள் இருவரும் அடிக்கடி அர்ச்சனா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், அர்ச்சனாவுடன் மதன் தொடர்பு வைத்திருப்பது, சமீபத்தில் பிரேம்ராஜிக்கு தெரிந்தது. அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மகளின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததை போல, தனது கள்ளக்காதல் விவகாரமும் தெரிந்தால் பிரேம்ராஜ் நிச்சயம் பிரச்னை செய்வார் என்று அனிதா கருதினார். இதனால் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தனது கள்ளக்காதலன் பிரபாகரன், மகளின் கள்ளக்காதலன் மதன் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். பிரேம்ராஜிக்கு, ஏற்கெனவே பிரபாகரனை நன்கு தெரியும் என்பதால், அவர் மூலமாக கொலையை அரங்கேற்ற முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன், பிரேம்ராஜை சந்தித்து பேசினார். இருவரும் பூந்தமல்லியில் உள்ள பாரில் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், பிரேம்ராஜை வீட்டில் படுக்க வைத்துவிட்டு பிரபாகரன் சென்றார். இரவு தனது சகோதரர் மதனுடன் அவர் பிரேம்ராஜ் வீட்டிற்கு மீண்டும் வந்தார். அங்கு போதையில் உறங்கிக் கொண்டிருந்த பிரேம்ராஜின், கழுத்தை எலக்ட்ரிக்கல் ஒயரால் இருவரும் சேர்ந்து நெரித்தனர். மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில், பிரேம்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின், பிரபாகரனும், மதனும், அனிதா வீட்டிற்கு சென்று, திட்டம் முடிந்துவிட்டதை கூறினர்.

சிறிது நேரம் கழித்து அனிதா பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, "ஸ்டாலின் நகரில் வசிக்கும் எனது கணவர் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அங்கிருந்தவர்கள் எனக்கு தகவல் தெரிவித்தனர்,' என்று கூறியுள்ளார். போலீசார் பிரேம்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அனிதாவிடம் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

அர்ச்சனாவின் மாஜி கணவர் லாரன்சிடம் போலீசார் விசாரித்தனர். அனிதா, அர்ச்சனா இருவருக்கும் பிரபாகரன், மதன் ஆகியோருடன் தொடர்பு இருப்பதை அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மதன், பிரபாகரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பிரேம்ராஜை கொலை செய்ததும், அதற்கு அனிதா திட்டம் வகுத்துக் கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அனிதா, பிரபாகரன், மதன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

===================

கதையில் பாருங்கள் பெண்கள் தங்களின் கள்ளக்காதலுக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுபோலத்தான் மாமியாரையும் கணவனையும் கொடுமை செய்துவிட்டு பல மருமகள்கள் போலிஸில் தாங்கள் எதுவும் செய்யாததுபோல கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுத்துவிட்டு அப்பாவிபோல நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மை பலபேருக்குத் தெரியாது.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.