இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, August 27, 2010

பணத்திற்காக கணவனைக் கொலை செய்ய முயன்ற மனைவி

பெண்களின் நிலையை இந்த சமுதாயம் எப்படி மாற்றிவைத்திருக்கிறது! திருமணம் செய்துவிட்டால் கணவன்தான் மனைவிக்கு எல்லாமே செய்யவேண்டும். விவாகரத்து செய்து பிரிந்தாலும் கணவன்தான் பணம் கொடுக்கவேண்டும். இப்படித்தான் சட்டங்கள் சொல்கிறது.

பெண்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் இதுபோல் கணவனின் கையை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரிபோல இந்த சமுதாயம் நடத்துமோ. நன்கு படித்து பணியில் இருக்கும் பெண்கள் கூட கணவன் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று பிச்சைக்காரி போல் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கணவனைப் பிடிக்கவில்லையென்றால் உதறித்தள்ளிவிட்டு தன் சொந்தக்காலில் நின்று தன் வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு இந்திய திருமணச் சட்டங்கள் பெண்களை முன்னேறவிடுவதில்லை.

இந்த மரபிலேயே ஊறி வளர்ந்துவிட்ட ஒரு பெண் கணவன் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கொலை செய்யவும் துணிந்துவிட்டார். இந்தியத் திருமணச் சட்டங்கள் மனைவியை எப்போதும் கணவனின் கையை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரிகளாகவே மாற்றிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் கீழுள்ள செய்தி.

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

ஆகஸ்ட் 27,2010 தினமலர்

கோவை: பணம் தராத கணவரை சரமாரியாக அடித்து, கம்பியால் வயிற்றை கிழித்த மனைவி மீது, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. கோவை ராமு வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(35); நகைப்பட்டறை தொழிலாளி. இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லதா(26). திருமணமானதில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. கணவரிடம் இருந்து பிரிந்த லதா, போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, தினமும் மனைவிக்கு 60 ரூபாய் கொடுத்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாள் தவறாமல் மனைவிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் விபத்தில் சிக்கினார் சதீஷ். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். வேலைக்கு செல்ல இயலாத நிலையில், மனைவிக்கு பணம் தர முடியவில்லை. ஆத்திரமடைந்த மனைவி லதா, கோபத்தில் கணவரை சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் வயிற்றில் கிழித்தார். இதில் காயமடைந்தவர் மீண்டும் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். மனைவியின் சித்ரவதை பற்றி போலீஸ் கமிஷனரிடம் சதீஷ் புகார் கொடுத்துள்ளார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.