இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, October 04, 2010

பெண்களே தாய்மையைப் பழிக்காதீர்

திருநெல்வேலி : நெல்லையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இசக்கியம்மாள்(29). இவரது முதல் கணவர் இறந்ததையடுத்து அவர்களது குழந்தை இசக்கியப்பன் என்ற கார்த்திக்(2) தாத்தா பராமரிப்பில் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு இசக்கியம்மாளுக்கும், நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள தேனீர்குளம் நியூ காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. பின்னர் தந்தையின் பராமரிப்பில் இருந்த தனது குழந்தை கார்த்திக்கை தானே வளர்த்துக் கொள்வதாக கூறி இசக்கியம்மாள் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். இதற்கிடையே இசக்கியம்மாளுக்கும், கணவர் பாலசுப்பிரமணியன் நண்பர்களுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை பாலசுப்பிரமணியனும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குழந்தை கார்த்திக் திடீரென இறந்தது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறி, ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு இசக்கியம்மாளும், அவரது கணவரும் ஒரு காரில் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளதால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இசக்கியம்மாளின் தந்தை ஆறுமுகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு "திடுக்' தகவல்கள் வெளியாயின.

இசக்கியம்மாளுக்கும், பாலசுப்பிரமணியனின் நண்பர்களான லாரி டிரைவர்களான சங்கரன்கோவில் குருசாமி(38), கோவை அம்சாவுக்கும்(42) இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இசக்கியம்மாளிடம் உல்லாசத்தில் இருக்கும் போது குழந்தை கார்த்திக் இடையூறு செய்ததால், அவனது உடலில் சிகரெட்டால் சூடு வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாவே குழந்தை இறந்ததாக தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் இசக்கியம்மாள், தந்தை பாலசுப்பிரமணியன், கள்ளக் காதலர்கள் குருசாமி, அம்சா ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது விரைவு கோர்ட்டில் நேற்று நடந்தது.வழக்கை நீதிபதி கமலாவதி விசாரணை செய்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கொலை செய்ததது உறுதி செய்யப்பட்டதால் இசக்கியம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் குருசாமி, அம்சா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.கள்ளத்தொடர்புக்காக பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

===========

இவர்களுக்குப் பெயர்தான் அபலைப் பெண்கள். இவர்களைப் பாதுகாக்கத்தான் பல சட்டங்கள் இருக்கின்றன!




1 comment:

nis said...

நல்ல தகவல்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.