இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, March 23, 2010

மொட்டைத்தலை + முழங்கால் = இந்திய நீதிமன்றம்!

தலைப்பைப் பார்த்து குழப்பமாக இருக்கிறதா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அது தான் இந்திய நீதிமன்றங்களின் இன்றைய நிலை. பொறுப்பான நிலையில் இருக்கும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும் போது அதுபோலத்தான் தோன்றுகிறது.


==========================================

திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்
தினமலர் மார்ச் 24,2010

Front page news and headlines today

புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

======================================

கிருஷ்ணரும் ராதையும் ஒன்றாக வாழ்ந்தார்களாம் அதனால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் எல்லோரும் கூடி வாழலாம் என்று சொல்கிறது நீதிமன்றம். இவர்கள் கடவுளை வைத்து இந்தியர்களை அவமானம் செய்கிறார்களா அல்லது கடவுள் பக்தியோடு கடவுள் காட்டிய வழியில் நடக்கவேண்டும் என்று சொல்கிறார்களா? அப்படியென்றால் ராமபிரானின் தந்தை தசரதனுக்கு நூற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர். அதனால் புராணங்கள் காட்டியவழியில் எல்லோரும் கணக்கிலடங்கா திருமணம் செய்துகொண்டால் அதற்கு நீதிமன்றம் இதுபோல ஆதரவு தருமா?

இந்தியாவில் பிறகெதற்கு இந்து திருமணச் சட்டம் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள்? யாரும் யாரோடு வேண்டுமானாலும் பிடித்தவரை கூடி வாழ்ந்துவிட்டு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு விலங்கினங்கள் போல நாட்டில் திரிந்துகொண்டிருக்கலாமே?

ஒரு தனிப்பட்ட நபர் சொல்லிய கருத்து அவரின் தனிப்பட்ட விஷயம் அதில் அடுத்தவர் அக்கறை காட்டத்தேவையில்லை என்று நாகரிகமாக வழக்கை முடிக்கத்தெரியாமல் கடவுளையும், புராணங்களையும் கொச்சைப்படுத்தி மேற்கோள்காட்டி மனித ஒழுக்கநெறியை உடைக்கும் விதமாக இப்படி ஒரு செய்தியைக்கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் எதற்கு? அதை கீழ்த்தரமான
ஒரு மஞ்சள் புத்தகமே எளிதாக செய்துவிடுமே!

இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத் தருவது பாரம்பரியம் மிக்க இந்திய குடும்ப அமைப்புமுறை. அரசியல்வாதிகளும் நீதிமன்றங்களும் அல்ல.
இதுபோன்ற பொறுப்பற்ற நீதிமன்ற கருத்துக்களின் பின்னணியில் இருப்பது மேற்கத்திய கலாச்சார இறக்குமதியும் அதற்கு கிடைத்துக்கொண்டிருக்கும் வெகுமதியும்.

மேலைநாடுகளில் தந்தையில்லாமல் குழந்தைகள் பிறப்பது சர்வசாதாரணமான விஷயம். குழந்தைப் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில் தந்தையில்லாத குழந்தை என்று குறிப்பிடும் வசதியும் இருக்கிறது அந்த நாடுகளில். தந்தை அல்லது தாய் இல்லாமல் ஒற்றைப் பெற்றோருடன் பலகுடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு சரியான வளர்ப்பு முறை இல்லாமல் மனித இனத்திற்குறிய கலாச்சாரமும் பண்பாடும் இல்லாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அதுபோன்ற இழிநிலை இந்தியாவிற்கு வரவேண்டும் என்பதுதான் இன்றைய அரசியல்தலைவர்களின் நீண்டநாள் கனவு. அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் பெயர் “பெண் சுதந்திரம்”! இந்தக் கனவு நனவாவதற்கு அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியும் கிடைக்கிறது. அந்த திட்டத்திற்குப் பெயர்தான் iVAWA

அரசியல் தலைவர்களின் அந்தக் கனவின் ஒரு வெளிப்பாடுதான் இந்திய நீதிமன்றத்தின் இந்த மொட்டைத்தலை + முழங்கால் கருத்துக்கள்!




6 comments:

சீ.பிரபாகரன் said...

குஷ்பு விவகாரத்தில் அவர் தெரிவித்த ஒரு கருத்து கருணாநிதி உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களால் தொடர்ந்து மூடிமறைக்கப்பட்ட வருகிறது.

இந்தியாடுடே என்ற மக்கள் விரோத பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் “திருமணத்திற்கு முன் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை” என்று குறிப்பிட்டார். அது தொடர்பாக எந்த பிரச்சனையும் எழவில்லை. ஏனெனில் இந்தியாடுடேவை படிக்கும் முட்டாள்கள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகமான வாசர்களைக்கொண்ட நாளேடான “தினத்தந்தி” நாளேட்டில் மேற்குறிப்பிட்ட கருத்து குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தமிழ்நாட்டில் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடாத பெண்கள் இருக்கிறார்களா?” என்று நக்கலாக எதிர்கேள்வி கேட்டார். இந்தச் செய்தி வெளியான பிறகுதான் தமிழ்நாட்டில் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடாத பெரும்பான்மையான பெண்களும் அவர்களின் குடும்பத்தைச்சேர்ந்தவர்களும் குஷ்புவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தினத்தந்தி”யில் வெளியான செய்தியை குஷ்புவிற்கு ஆதரவானவர்கள் அனைவரும் தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் மறைத்து வருகின்றனர்.

து.தூ.போ.மி. சங்கம் said...

இப்படியெல்லாம் சொன்னால் முஹம்மது கட்டின பொண்டாட்டியை பிரம்பால் அடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியது படி நடக்கிறேன் என்று முசுலீம்கள் கேஸ் போட்டு ஜெயித்துப் பொண்டாட்டிகளை அடிப்பார்கள்.

shaan said...

கிருஷ்ணர்-ராதை கதையை அவர்கள் இழுத்திருக்க வேண்டாம் என்பது சரி. ஆனால் திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பது அவரவர் சொந்த விருப்பம். அதையெல்லாம் தடை செய்ய முடியாது. இந்திய கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறீர்கள், தமிழ் நாட்டில் களவு என்பது சிறந்த ஒழுக்கமாக எப்போதுமே கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது. வடநாட்டில் இது காந்தர்வ மணம் என்று அழைக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள் என்னவாகும் என்று நினைக்க அவசியமில்லை. ஏனென்றால் சட்டப்படி குழந்தை திருமணத்துக்கு முன் பிறந்தாலும் பின் பிறந்தாலும் அதற்கு உரிமை ஒரே போலத் தான். நீங்கள் கூறுவது போலப் பார்த்தால் விவாகரத்தையும் கூட தடை செய்ய வேண்டுமே?

நீங்கள் இன்று கூறும் நாகரிகம் நமது நாகரிகம் அல்ல. அது 19ஆம் நூற்றாண்டு மேலை நாட்டு நாகரிகம். நமது நாகரிகம் சங்க இலக்கியங்களில் கூறியுள்ளபடி களவு, கற்பு என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. கற்பு என்பது திருமணத்தை பொறுத்தது அல்ல. ஒருவள் ஒருவனை மட்டுமே சேர்ந்து வாழ்நாள் முழுவதும் இருக்கிறாளா என்பது தான்.

மு. மயூரன் said...
This comment has been removed by the author.
மு. மயூரன் said...
This comment has been removed by the author.
பெண்கள் நாட்டின் கண்கள் said...

தானாக ஒருவர் வந்தார். எங்கு எழுதுகிறோம் என்று தெரியாமலேயே சிந்திக்காமல் எழுதினார். பிறகு அடக்குமுறை என்றார், ஆணவம் என்றார், பிற்போக்கு என்றார் கடைசியில் தன்னை முற்போக்கு என்று கூறி தானாகச் சென்றார்.

இதற்குப்பெயர்தான் முற்போக்குத்தனம் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இந்த எளிமையை புரிந்துகொள்ளாததால்தான் நான் இன்னும் பிற்போக்குத்தனமாகவே இருக்கிறேன் போலிருக்கிறது.

===================

/இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத் தருவது பாரம்பரியம் மிக்க இந்திய குடும்ப அமைப்புமுறை.//

நினைத்துப்பார்க்க முடியாதளவு முன்னோக்கிச் சிந்தித்த பெரியாரின் பாசறையில் இருந்து வந்த ஒருவரும் இந்துத்துவாக்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியக் குடும்ப அமைப்பு முறையத்தான் இந்தியப்பெண்களில் அடிமை நிலைக்கான சிறைக்கூடமாக பெரியார் கண்டார்.

அதைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் கருத்துச்சொல்கிறீர்கள்.

இந்தியத் திருமண-குடும்ப அமைப்பு முறைதான் சாதியம் தொடக்கம் பெண்ணடிமைத்தனம், குழந்தைகள் மீதான மேலாதிக்க வன்முறைவரை எல்லாவற்றினதும் அடிப்படையாக இருக்கிறது.

இந்தியாவில் காலகாலமாக இருந்துவந்த மருத்துவப் பண்பாட்டால் சாமாளிக்க முடியாதிருந்த சிசு மரண வீதம் நினைவிருக்கிறதா? ஒவ்வொரு தாய்க்கும் பிறக்கும் குழந்தைகளில் ஐந்து குழந்தையாவது தவறிக்கொண்டிருந்த காலத்தில் மேல்நாட்டு "தடுப்பூசி" முறைகள் வந்த பின்புதான் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது.

அப்போ மேல்நாட்டு மருத்துவமுறைய எமது பண்பாட்டு மருத்துவத்தை மறந்துவிட்டு இறக்குமதி செய்கிறோம் என்று கூச்சலிடுவதா?

ஆண்-பெண் உறவுகளின் ஒழுங்குபடுத்தலில் திருமண உறவு பற்றிய புனிதப்படுத்தல்களில் உங்கள் கருத்துக்கள் பெரியாரிடம் இருந்த முற்போக்கான வரலாற்று, பண்பாட்டுப் பார்வையிலிருந்து முற்றாக வேறுபடுகிறது.

பெரியாரின் வார்த்தைகள் வருமாறு:

//தனி உடைமை இல்லாத ரஷ்யா போன்ற நாடுகளில் பெண்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். தனி உடைமை இல்லாத நாடில் திருமண முறை இருக்காது. வாழ்க்கை ஒப்பந்தந்தான் இருக்கும். //

===================
அட நான் எழுதியவரை சரியாகக் கவனியாது கருத்து இட்டுவிட்டேன்.

நண்பர் அனுப்பிய தொடுப்பினூடாக வந்ததால் வந்த வினை.

என்னுடைய கருத்தை பிரசுரிக்க வேண்டியதில்லை.

படு பிற்போக்கான சுயநலமும் ஆணவமும் அடக்குமுறையும் மிகுந்த இந்த வலைப்பதிவில் நான் உரையாடவும் விரும்பவில்லை

=========================

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.