பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன்பு திருவள்ளுவரின் இந்த திருக்குறள்களை படித்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
திருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார்.
விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.
செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார் மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.
அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.