இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 13, 2012

மருமகளை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கறிஞரின் மனைவி கைது

பின்வரும் இரண்டு செய்திகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்...

National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. " There is lack of awareness amongst people that is exploited by lawyers and police.''
(The Times of India, 1Feb 2009)


திருப்பூர்: மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக, மாமியாரை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி; வழக்கறிஞர். இவரின் மனைவி சரோஜினி,57. இவர்கள் மகன் வருண்குமார். 2004ல், புதுச்சேரியில் கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த செல்லிதாஸ் என்ற பெண்ணை, காதலித்து வந்தார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்தனர். 2007ல் இருவரும், குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின், திருப்பூர் மகாலட்சுமி நகரில், மனைவியுடன் வருண்குமார் வசித்தார்; இரண்டு வயதில் அவர்களுக்கு, ஆண் குழந்தை உள்ளது. வருண்குமாரின் பெற்றோர், திருப்பூரில் பனியன் கம்பெனி அமைத்துக் கொடுத்தனர்; அவ்வப்போது, திருப்பூர் வீட்டுக்கு வந்து தங்கினர். கடந்த மார்ச், 18ம் தேதி, டில்லியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்ல வேண்டும் என, கணவர் வருண்குமாரிடம், செல்லிதாஸ் கேட்டார்; அடுத்த வாரம் செல்லலாம் என, கணவர் கூறினார்.

இதற்கிடையே செல்லிதாஸ், தூக்கு போட்டு உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார், தற்கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், செல்லிதாசின் தாய் அமிர்தா தாஸ் மற்றும் அவர்களது உறவினர்கள், மே 26ம் தேதி, போலீசில் புகார் அளித்தனர். அதில், "செல்லிதாஸ் தானாக தற்கொலை செய்து கொள்ளவில்லை; வரதட்சணை கேட்டு மாமியார் சரோஜினி துன்புறுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்' என, கூறியிருந்தனர்.

விசாரணையில், செல்லிதாசை அவரது மாமியார் சரோஜினி துன்புறுத்தியது தெரிய வந்ததால், தற்கொலை வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருப்பூர் வடக்கு உதவி எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் முருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை, நேற்று முன்தினம் இரவு, ஈரோடு சென்று சரோஜினியை கைது செய்தது. திருப்பூர் அழைத்து வரப்பட்ட அவர், ஜே.எம்., கோர்ட் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.