இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 12, 2012

இந்தியாவில் விவாகரத்து இனி காவல் நிலையத்திலேயே கிடைத்துவிடும்!

இன்றைய செய்தி இந்திய நீதிமன்றங்களையும், இந்திய திருமணச் சட்டங்களையும் கேலிக்கூத்தாக எண்ண வைத்திருக்கிறது.


மேலூர்: மேலூர் அருகே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், போலீசாரின் உதவியுடன் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் மகள் அம்பிகா,19. இவரும், உறவினர் கருப்பசாமி மகன் பார்த்திபனும், 22, நான்கு ஆண்டுகளாக காதலித்தனர். வேலை இல்லாமல் சுற்றிய பார்த்திபனுக்கு பெண் கொடுக்க மறுத்து, சகோதரி மகன் பாண்டீஸ்வரனுக்கு, மகள் அம்பிகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார் ரங்கநாதன். பாண்டீஸ்வரன் சென்னையில் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயராக வேலை செய்கிறார்.

இத்திருமணத்திற்கு அம்பிகா எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் மகளை சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றார் ரங்கநாதன். ஜூன் 8ந் தேதி திருச்சுனை கோயிலில் அம்பிகாவிற்கும், பாண்டீஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. இதுதெரிந்து அம்பிகாவை மீட்டு தருமாறு பார்த்திபன் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அனைவரையும் அழைத்து ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என அம்பிகா பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவர் மதுரை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

மகளின் பிடிவாதத்தை பார்த்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு பின், அவரின் விருப்பப்படி காதலனுக்கு திருமணம் செய்வதாக சம்மதித்தனர். நேற்று முன்தினம் இரவு அம்பிகா, பாண்டீஸ்வரன் கட்டிய தாலியை கழற்றி கொடுத்தார். பின் மணப்பட்டி விநாயகர் கோயிலில் பார்த்திபனுக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு பாண்டீஸ்வரனின் குடும்பத்தினர் ஒப்பு கொண்டு, போலீசார் முன் எழுதி கொடுத்தனர். காதலியை கண் கலங்காமல் பாதுகாப்பதாக பார்த்திபனும் எழுதி அம்பிகா பெற்றோரிடம் கொடுத்தார்.

======

பெண்ணின் பெற்றோர் பெண்ணை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். காதலன் போலிஸில் புகார் கூறியவுடன் காவல் நிலையத்தில் பெண்ணின் தாலியை அறுக்க வைத்து திருமணத்தை செல்லாததாக மாற்றிவிட்டு காதலனுடன் திருமணம் செய்து வைத்தார்களாம்.

  • அப்படியென்றால் திருமணங்களை ரத்து செய்ய நீதிமன்றங்கள் எதற்கு?
  • திருமணத்தை ரத்து செய்ய இந்திய திருமணச் சட்டங்கள் எதற்கு?
  • பெண்ணை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை? அப்படியென்றால் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எதற்கு?
இந்தக் கேள்விகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்:
  • இந்திய திருமண சட்டங்கள் பிடிக்காத கணவனை பழிவாங்க பயன்படுத்தப் படும் ஆயுதங்கள் மட்டுமே.
  • அப்பாவி கணவன்களை விவாகரத்து வழக்கு என்ற பெயரில் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைய வைத்து வாழ்வை நாசமாக்கி மனைவிக்குத் தேவையான பணத்தை வாங்கிக் கொடுக்கும் இடங்கள்தான் நீதிமன்றங்கள்.
  • பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் கணவன் குடும்பத்தார் மீது பொய் வழக்குப் போட மட்டுமே பயன்படுத்தப்படும் சட்ட வழிமுறை.
  • போலிஸ் எந்த சட்டத்தையும் மதிக்கத் தேவையில்லை தாங்கள் நினைப்பதையெல்லாம் செய்வார்கள். நீதிமன்றங்கள் இவர்களை கட்டுப்படுத்த முடியாது.

இப்படித்தான் இந்த செய்தியிலிருந்து பதில் கிடைக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.