சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 13, 2012

இளம் பெண் எஸ்.ஐ.-யின் “பேண்ட் பாக்கெட்டில்” இருந்தது என்ன? மாவட்ட எஸ்.பி.யின் நேரடி விசாரணை

பெண்கள் தொடர்பான வழக்குகளில் பெண் போலிஸார் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பொய் வரதட்சணை வழக்கு எழுதுவது, கணவனின் குடும்பத்தாரை அவமரியாதை செய்வது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்குவது, மிரட்டுவது, லஞ்சம் வாங்குவது என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இதுபோன்ற லட்சணத்தில் இருக்கும் இடத்தில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்தும் அதிகாரங்கள் இருந்தால் எப்படி இருக்கும்! நாட்டில் உருவாகும் பொய் வரதட்சணை வழக்குகளின் பிறப்பிடமே மகளிர் காவல் நிலையங்கள்தான். மனைவியின் தரப்பிலிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதாரண குடும்பப் பிரச்சனைக்கு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கணவனின் குடும்பத்தை கைது செய்வதாக மிரட்டி அங்கேயும் பணம் பறிப்பார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு குற்றப் பத்திரிக்கை என்ற பெயரில் ஒரு பொய்யான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டு அப்பாவிகளின் குடும்பத்தை அழித்துவிட்ட நிம்மதியோடு சந்தோஷமாக அடுத்த பொய் வழக்கிற்கு சென்றுவிடுவார்கள். இதுதான் இன்றைய நிலை. அதுதான் இன்றைய செய்தியில் வந்திருக்கிறது.

புதன்கிழமை, ஜூன் 13, 2012, One India Tamil

உடுமலைப்பேட்டை : வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உடுமலைப் பேட்டை உதவி ஆய்வாளரை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் பூர்ணிமா (வயது 32). இவரிடம், கடந்த மாதம் சிவபதி காலனியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மனைவி அங்கையர்கண்ணி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனது கணவர் மணிவண்ணனுக்கும், சுமதி என்ற ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், தனது கணவரை சுமதியிடமிருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவின்படி போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்ததும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்ற மணிவண்ணன் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.

போலிஸ் உதவி ஆய்வாளர் பூர்ணிமாவால் இந்த வழக்கில், நேரடியாக மணிவண்ணனை கைது செய்ய முடியாமல் போனாலும், அவர் மீது குற்றம் இல்லாத மாதிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமானால் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மணிவண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பூர்ணிமாவுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன் நேராக திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ராகர்க்கிடம் சென்று பூர்ணிமா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதை பற்றி புகார் கொடுத்துள்ளார்.

எஸ்.பி.அஸ்ராகர்க்கின் ஆலோசனைப்படி, செவ்வாய்கிழமை ஒன்பது மணிக்கு காவல் நிலையத்துக்கு தனியாக சென்ற மணிவண்ணன் பூர்ணிமா கேட்டபடி பணம் 25 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறி அந்த பணத்தை பூர்ணிமாவிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பூர்ணிமா பெற்றுக்கொண்டதும், அதை குறுந்தகவல் மூலம் வெளியில் இருந்த எஸ்.பி.அஸ்ராகர்க்கிர்க்கு தெரிவித்து விட்டு. தன்மீது மனைவி கொடுத்துள்ள புகாரிலிருந்து தனக்கு ஆதரவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு பூணிமாவிடம் பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டியுள்ளார் மணிவண்ணன்.

மணிவண்ணனிடமிருந்து பணத்தை வாங்கிய ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்துக்குள் நுழைந்த எஸ்.பி.அஸ்ராகர்க், சத்தமில்லாமல் எஸ்.பி வந்ததை பார்த்த போலீசார் அனைவரும், அரண்டு போய்விட்டனர். நேராக மணிவண்ணன் பூர்ணிமா இருவரும் பேசிக்கொண்டு இருந்த இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பூர்ணிமாவிடம் பணத்தை எடுக்கும்படி சொல்லியுள்ளார். எஸ்.பி க்கு "சல்யூட்" அடித்துவிட்டு பேந்த பேந்த விழித்த பூர்ணிமாவிடம், இவரிடம் வாங்கிய பணம் 25 ஆயிரத்தை எடு என்று கூறியுள்ளார்.

மணிவண்ணன் பணம் கொண்டுவந்தது எஸ்.பிக்கு தெரியும் என்பதை தெரிந்து கொண்ட பூர்ணிமா தனது பேண்டு பாய்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எஸ்.பி யிடம் கொடுத்துள்ளார். இரவு பத்து மணிவரை பூர்ணிமாவிடமும், மணிவண்ணனிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி அஸ்ராகர்க் அதன் பிறகு எஸ்.ஐ பூர்ணிமாவை மட்டும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

போலீசார் லஞ்சம் கேட்டதற்காக அவர்கள் மீது விசாரணை, இடமாற்றம், என்று வெட்டி நடவடிக்கைகளை எடுக்காமல், கைது செய்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள அஸ்ராகர்க்கின் அதிரடி நடவடிக்கையால் திருப்பூர் மாவட்ட போலீசார் மிரண்டு போயுள்ளனர். மதுரையில் இருந்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாக கடந்த மாதம் பொறுப்பேற்ற அஸ்ரா கார்க், லஞ்சம் வாங்கும் போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.