சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 19, 2012

இந்திய மக்களை நம்பிக்கை இழக்க வைக்கும் நீதித்துறை!!

தினமும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படிக்கும்போது இந்திய மக்கள் நீதித்துறையை நம்புவதா வேண்டாமா என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவில் ஒரு முன்னாள் நீதிபதியும், ஒரு இன்னாள் நீதிபதியும் லஞ்ச வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு வழக்கிலும் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்மானிப்பது நீதிமன்றங்கள். இந்த நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதியே குற்றவாளியானால் அவர் இதுவரை வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் அல்லவா? அப்படியென்றால் சாதாரண பொது மக்கள் நீதித்துறையை எப்படி நம்புவார்கள்?

இதுவே இப்படியென்றால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி இதுபோன்ற நீதிமன்றத்திற்கு செல்லும் அப்பாவிகள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.


இதனால்தான் என்னவோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கட்டுரையில் “உங்கள் எதிரியை பழிவாங்க வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு பொய் வழக்கை போட்டு அவனை நீதிமன்றத்திற்கு அலையவிட்டால் போதும். அவனை பழிவாங்கும் வேலையை நீதிமன்றம் கவனித்துக்கொள்ளும்” என்று அழகாக உண்மையை எழுதியிருந்தார்கள். அது முற்றிலும் உண்மை என்பது இப்போது தெள்ளத் தெளிவாக புரிகிறது.


ஐதராபாத்: சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்க லஞ்சம் பெற்ற, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

சஸ்பெண்ட்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். இந்த நிறுவனம், ஆந்திராவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கியதை அடுத்து, ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமினில் விடுவிக்க, ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவ், 1.60 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், ராமராவிற்கு சொந்தமான வங்கிகளில் உள்ள ஐந்து லாக்கர்களில் இருந்து, 1.60 கோடி ரூபாயை கைப்பற்றினர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், நீதிபதி பட்டாபி ராமராவை, கடந்த மாதம் 31ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அத்துடன் ராமராவிற்கு எதிரான ஊழல் புகாரை, ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிபதி பட்டாபி ராமராவ், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரரும், பெல்லாரி நகர எம்.எல்.ஏ.,வுமான சோமசேகர ரெட்டி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சலபதிராவ் என்பவர் உட்பட எட்டு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அழைத்து வந்து விசாரணை
: இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை நீதிபதி பட்டாபி ராமராவின் வீட்டிற்குச் சென்று, அவரை தங்களின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் கொடுக்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த, ஆந்திர மாநில ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனர் ஜெனரல் பிரசாத ராவ், "அவர் நீதிமன்ற காவலுக்காக கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுவார்' என்றார்.


மூன்றாவது நபர்
: இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி சலபதிராவ் மற்றும் பட்டாபி ராமராவின் மகன் ரவிச்சந்திரா ஆகியோர், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது மூன்றாவதாக, நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.