சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, June 22, 2012

தீயில் பொசுங்கிய திருட்டு காதல்!

இந்த செய்தியை படிப்பதற்கு முன் இந்திய கள்ளக்காதல் சட்டம் சொல்லும் அரிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்திய கள்ளக்காதல் சட்டப்படி கள்ளக் காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே குற்றவாளி. கள்ளக்காமத்தில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது. அதனால் பின்வரும் செய்தியில் அக்னி பகவான் இந்திய சட்டத்திற்கு எதிராக ஒரு பெண்ணை பலிவாங்கி விட்டார் என்று வன்மையாக கண்டிக்கலாம்!

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

ஜூன் 22,2012 தினமலர்


திருச்சி: திருச்சி அருகே கள்ளக்காதலன் சந்தேகப்பட்டதால் தீக்குளித்த பெண்ணும், அவரை காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் மருத்துவமனையில் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அம்மாப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவர் கடந்த ஏழாண்டுக்கு முன் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த ப்ரியா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது லோகநாதன் என்ற ஏழு வயது மகன் உள்ளார்.

திருமணத்துக்கு பின் காரைக்குடியில் சில ஆண்டு மனைவியுடன் ராஜா வசித்தபோது, அவரது சித்தப்பா மகன் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மணிகண்டனுக்கும், ப்ரியாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த ராஜா இருவரையும் கண்டித்து, மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து, திருச்சி திருவெறும்பூர் போலீஸ் காலனியில் குடியேறினார். அதன்பின் ராஜாவுக்கு வேலூரில் உள்ள பால் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இதையடுத்து தனது குடும்பத்தை வேலூருக்கு ராஜா மாற்றினார். அங்கு சென்றதும் ப்ரியாவுக்கு சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது. இதையடுத்து தனது மகனை திருவெறும்பூர் போலீஸ் காலனியில் தனது தாயாரிடம் ப்ரியா ஒப்படைத்து, அங்கே படிக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் ப்ரியாவின் கள்ளக்காதலன் மணிகண்டன் சிங்கப்பூரில் இரண்டு ஆண்டு வேலை பார்த்துவிட்டு இரண்டு மாத விடுமுறையில் வந்திருந்தார். இதை கேள்விப்பட்ட ப்ரியா, மகனை பார்க்க வருவதாக கூறிவிட்டு, திருச்சி வந்துள்ளார்.

ப்ரியா திருச்சி வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு, அவரது தாயார் காரைக்குடி சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மணிகண்டன் திருவெறும்பூர் போலீஸ் காலனி வந்து, ப்ரியாவுடன் ஒரு வாரம் தங்கியிருந்துள்ளார்.
இருவரும் ஜாலியாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரியா தனது மொபைல்ஃபோனில், வேலூரில் உள்ள கணவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மணிகண்டன் யாருடன் பேசுகிறாய்? என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு ப்ரியாவே, கணவனுடன் தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். அவரிடம் எப்படி பேசலாம்? என்று மணிகண்டன் கேட்க, அதற்கு ப்ரியாவோ, கணவனுடன் பேசுவதை கேட்க நீ யார்? என்று கேட்டுள்ளார்.

அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ப்ரியா திடீரென தீக்குளித்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தீக்குளித்த ப்ரியாவை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டனும், நேற்று காலை ப்ரியாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.

=====

அன்னையின் கள்ளக்காமத்தால் கடைசியில் ஒரு அப்பாவிக் குழந்தை அம்மா இல்லாத அனாதையாகிவிட்டது. இந்திய சட்டம் இது போன்ற குழந்தைகளைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.