இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, April 15, 2012

பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?

கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்குவதற்காக வரதட்சணை சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இளம் மனைவிகளையும் இந்த சமுதாயம் தவறாகத்தான் பயன்படுத்தும் என்பது மாற்றமுடியாத உண்மை. இதில் பாதுகாப்பு தருகிறோம், கணவன் மீது எப்படியெல்லாம் பொய் வழக்குப்போடலாம் என்று சொல்லிக் கொடுத்து கணவனை உன் வழிக்குக் கொண்டு வருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறும் கூட்டம்தான் கடைசியில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் அடுத்த ஆணின் இளம் மனைவிகளை அனுபவித்து வருகிறார்கள். அதற்கு சிறு உதாரணம்தான் இந்த செய்தி...



ஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார்.

புகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி பட்டியல்:
துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

3 comments:

ப.கந்தசாமி said...

இன்ட்லி மற்றும் தமிழ்மணம் ஓட்டுப் பட்டைகள் உங்கள் பதிவில் இயங்குவதில்லை.

முக்கியமான தகவல்தான்.

Unknown said...

ஒவ்வொரு பதிவும் ஒரு முத்து !!

வாழ்த்துக்கள்

இந்த பதிவும் [http://ipc498a-misuse.blogspot.com/2012/04/blog-post_15.html] , "...அடுத்தவன் பொண்டாட்டி மேல எப்பவுமே நமக்கு தனி பாசம்தான்!! கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் சொல்லும் பாடம்! ...." ஆகிய இரண்டும் இன்று படித்தேன்

முத்தோ முத்து !!

மீண்டும் வாழ்த்துக்கள் !!

அன்புடன்

விநாயக்

498ஏ அப்பாவி said...

அன்பு​டை​யோருக்கு.

திருமணத்திற்கு முன்பு ஆண்கள்​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய சட்டமும் அதன் பாதிப்பும்.

ஒய்விருக்கும் ​பொழுது கீழ்கண்ட வ​லைப்பூ​வை படித்துப்பார்கவும்

http://ipc498a-victim.blogspot.com

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.