இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, June 12, 2011

மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள் - 3

பெற்ற மகளின் வாழ்வை சீரழிப்பதில் பல வகை இருக்கிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் தங்களின் “ஈகோ”விற்கு பலியாக மகளை ஏவிவிட்டு அவளது கணவன் மீதே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளின் வாழ்வை சீரழிப்பதுதான் பெரும்பாலும் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கும் மிகவும் பிரபலமான வழக்கம்.

மற்ற வழிமுறைகளை இங்கே காணலாம்:
1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்


ஆனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் புதுப்புது வழிமுறையைக் கண்டுபிடித்து வருகிறார்கள். இது எங்குபோய் முடியும் என்று யாருக்குமே தெரியவில்லை. கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தான்.

மகளின் காதல் கணவர் கொலை: சென்னை என்ஜினீயரை கொல்ல ரூ.5 லட்சம் பணம்; மேலும் 2 பேருக்கு தொடர்பு

விழுப்புரம், ஜூன்.12-2011 மாலை மலர்

சென்னை சிந்தாதிரிப் பேட்டை அய்யாவு முதலியார் தெருவை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதியும் பெரம்பூரை சேர்ந்த என்ஜினீயர் நரசிம்மனின் மகள் சரண்யாவும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து சரண்யாவின் தந்தை கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை கொலை செய்தார். தனிப்படை போலீசார் சரண்யாவின் தந்தை நரசிம்மன் மற்றும் ஜானகிராமன், ஹேமந்த் ராம், திலீப், சலுஜா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நரசிம்மன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் மகள் சரண்யா காதல் விவகாரம் தெரியவந்ததும் பார்த்தசாரதியை மிரட்டினோம். ஆனால் காதலை கைவிடாமல் அவர் எனது மகளை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சரண்யாவை பிரிந்து செல்லும்படி மிரட்டி வந்தோம். பார்த்தசாரதி கேட்கவில்லை. எனவே தான் சலுஜா மூலம் கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை தீர்த்து கட்டி முடிவு செய்தேன்.

ஜானகி ராமன், ஹேமந்ராம், திலீப் ஆகியோரை சலுஜா ஏற்பாடு செய்து கொடுத்தார். பார்த்தசாரதியை மிரட்டி விரட்டிவிடலாம் என நினைத்தோம். இதற்காகவே கூலிப்படை மூலம் காரில் கடத்தினோம். ஆனால் பார்த்தசாரதி பணியாததால் வேறு வழியில்லாமல் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூலிப்படையினருக்கு முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதில் ஜானகிராமன் மோட்டார் சைக்கிள் வாங்கி பார்த்தசாரதி நடவடிக்கைகளை கண்காணித்து வந்தான். கொலை நடந்த பிறகு மேலும் ரூ.4 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது.மேலும் ரூ.5 லட்சம் கேட்டனர். அதையும் கொடுக்க இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் பார்த்தசாரதி பிணத்தை கண்டுபிடித்த போலீசார் நாங்கள்தான் கொலையாளி என்பதை தெரிந்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலையில் கூலிப்படை தலைவனாக திலீப் செயல்பட்டு வந்துள்ளான். பார்த்தசாரதியை, திலீப், ஜானகிராமன், ஹேமந்தராம் 3 பேர் மட்டுமே காரில் கடத்தி சென்றதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் மேலும் 2 பேர் அந்த காரில் இருந்து உள்ளனர். அவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சரண்யா தனது தாயாரும் பார்த்தசாரதி கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் கூறியுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

=====

தான் பெற்ற மகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அவளை காதலித்தவனுக்குத் தண்டனை தருவது எந்த வகையில் நியாயமாகும்? இப்படித்தான் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் பலர் தங்கள் மகள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்காமல் அவளது கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தி வருகிறார்கள். எது எப்படியோ கடைசியில் தங்கள் மகளின் வாழ்வை தாங்களே சீரழித்த திருப்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. இதுதான் இன்றைய மனநிலை.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.