இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 03, 2009

கற்பழிப்பு புகாரை ஏற்க மறுத்த பெண் எஸ்.ஐ.,க்கள்

கற்பழிப்பு புகாரை ஏற்க மறுத்த பெண் எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்


வரதட்சணை புகாராக இருந்திருந்தால் உடனே
FIR பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றhல் அதில் விசாரணையே செய்யாமல் அப்பாவிகளை மிரட்டலாம். இரண்டு பக்கத்திலும் வருமானம் கிடைக்கும்.

ஜூலை 04,2009

அரியலூர்: கற்பழிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்க மறுத்த இரண்டு பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து போலீசாரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, குருவாடி காலனி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரகாசன் மகள் ராஜேஸ்வரி(22). பெற்றோர் வயல்வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராஜேஸ்வரி தனிமையில் இருப்பதை அறிந்த, அதே தெருவைச் சேர்ந்த வாலிபர் தேவேந்திரன்(23), வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரியை மானபங்கபடுத்தி, பலவந்தமாக கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி பகல் ஒரு மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, ராஜேஸ்வரி தன் பெற்றோருடன் தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கச் சென்றார். அவரது புகாரை வாங்க மறுத்த எஸ்.ஐ., கலைவாணி, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். ராஜேஸ்வரி புகார் அங்கும் ஏற்கப்படாமல், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டார்.

அங்கும் புகார் மனு ஏற்கப்படாத நிலையில், உடல்வலி தாங்க முடியாமல் இளம்பெண் ராஜேஸ்வரி அவதிப்பட்டதால், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, மருத்துவமனையிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, ஜூலை 1ம் தேதி மாலை, தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கற்பழிக்கப்பட்ட கால் ஊனமுற்ற ராஜேஸ்வரி கொடுத்த புகாரை ஏற்க மறுத்தது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். தூத்தூர் போலீஸ் எஸ்.ஐ., கலைவாணி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ., மலர்கொடி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் தூத்தூர் பாண்டியன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சித்ரா, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமுதா உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

5 comments:

தமிழ். சரவணன் said...

இதோ இன்னொரு வரதட்சணை கொடுமை சாவு சென்னையில்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=498815&disdate=7/6/2009&advt=2

தமிழ். சரவணன் said...

இதோ இன்னொரு வரதட்சணை கொடுமை சாவு சென்னையில்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=498815&disdate=7/6/2009&advt=2

தமிழ். சரவணன் said...

புரட்சி விரைவில் வெடிக்கட்டும்...

இப்போழுது ஒரின சேர்கையாளர்களை தண்டிக்க இருந்த 377 என்ன சட்டம் நீக்கப்பட்டுள்ளது, விரைவில் இவர்கள் திருமணம் செய்ய சட்டம் வந்தாலூம் ஆச்சரியப்படுவதிற்கில்லை.. இதில் இரு பெண்கள் திருமணம் செய்துகொண்டு பிரியநேரும் பொழுது வரதட்சணை கொடுமை சட்டம் இந்த இரு பெண்களில் யார்மீது பாயும்..?

முதலில் வருபவருக்கே முன்னுரிமை இதை நிலைநாட்டுவதுதான் பெண்ணுரிமை... தொடரட்டும் புரட்சிகள் நம் நாட்டில்...

தமிழ். சரவணன் said...

வாரமலர் இதழலில் (5/7/2009) வெளியாண அந்துமணி கேள்வி-பதில் பகுதியல வெளியான கேள்வி...

சி.பரமகுரு, மதுரை: திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை முற்று பெறாது என்கின்றனரே...

* கப்ஸா! திருமணமான ஆண்கள் படும் அவஸ்தைகளைத் தான் கண் எதிரே பார்க்கிறோமே... அவர்கள் என்ன முழுமை பெற்று விட்டனரா? முடிந்தால், "பேச்சுலரா' இருந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்!

தமிழ். சரவணன் said...

பாரட்ட தக்க விசயம்... ஆரம்பத்துலயே இந்த புண்ணியவான் மாப்ள தப்பிச்கிட்டாரு.. இல்லாட்டி கள்கக்காதல் கொலை அல்லது 498ஏ வரதட்சணை கொடுமை பொய்வழக்கு... ஏமாந்த சோனகிரி தலையில் இது போல் பெண்களை குடும்ப மானம் மயிறு மட்டை என்று கட்டி வைத்து... அப்பாவி கூட்டத்தை போலீஸ் கோர்ட்டு என்ற அலையவிடுவது வாடிக்கை... இதல்லம் இப்போது வழக்க மாக நடக்கம் வேடிக்கை..

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11273

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.