இதுபோல சமுதாயத்தின் கீழ்நிலையில் இருக்கும் பெண்களுக்காக இந்திய பெண்கள் நல அமைச்சகமும், தேசிய பெண்கள் நல வாரியமும் உண்மையாகவே ஏதாவது செய்திருப்பார்களா? இந்தியப் பெண்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அமைதியாக பல நல்ல பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்வை மேலைநாட்டுக் கலாச்சாரத்துடன் "Women Empowerment" என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இளம் பெண் மதுபான விடுதிக்குச் செல்ல உரிமையில்லையா என்று ஆர்ப்பாட்டமாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

நரிக்குறவர் இனத்தின் முன்னேற்றத்திற்காகஉதவும், அதே இனத்தைச் சேர்ந்த ஞானசுந்தரி: நான், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண். என் கணவரை, கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். அவரின் ஊக்குவிப்பால், பி.ஏ., முடித்தேன்.
சிறு வயதில் இருந்தே, எங்கள் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்தவள் நான். ஏதாவது ஒரு வழியில், அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பேன்; என் கணவருக்கும் அதே எண்ணம் தான். அவர்களின் நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பினோம்.
சைதாப்பேட்டையில், 25 நரிக்குறவ குழந்தைகளுக்காக பள்ளியைத் துவக்கினோம். அதை திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தினோம். இங்கு படித்த எவ்வளவோ பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும், முறையான விழிப்புணர்வு இல்லை. படிப்பை இன்னும் எட்டாக்கனியாகத் தான் அவர்கள் பார்க்கின்றனர்.
குடும்ப சூழலால் பல பெண்கள், படிக்க முடியாமல் உள்ளனர். அவர்கள் கஷ்டப்பட்டு தான் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வருமானத்தைப் பெருக்கத் தான் பாசிமணிகள் மூலம், விதவிதமான அணிகலன்கள் செய்து விற்க, பயிற்சி அளிக்கிறேன்.
"பேஷன்' நகைகள் செய்வதற்கான மூலப்பொருட்களை, டில்லி, மும்பை, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து, மொத்தமாக வரவழைக்கிறோம். காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாயத்தை தான், நகைகள் செய்ய பயன்படுத்துகிறோம். அதனால், இந்த நகைகளை அணியும் போது, நம் உடலில், "அலர்ஜி' ஏற்படாது.
எங்கள் நகைகளுக்கு வெளிநாடுகளில், நல்ல வரவேற்பு உள்ளது. அரசு நடத்தும், கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும், எங்களுக்கென்று தனியாக, "ஸ்டால்' ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.
எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்களுக்கு, அரசு மானிய உதவித் தொகை கொடுத்து ஊக்குவித்தால், அவர்கள் செய்து கொடுக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கும், நல்ல விலைக்கு விற்பதற்கும் உதவத் தயாராக இருக்கிறோம்.
1 comment:
இவரைப் பற்றி டிவியிலும் பார்த்துள்ளேன் .. சிறப்பான பெண்மணி .. வாழ்த்துக்கள் அவருக்கு !
Post a Comment