அதனால் இன்று இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் நீங்கள் அநீதியைக் கண்டு போராட நினைத்தால் முதலில் உங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பொது நல வழக்குகளைத் தொடர்ந்த சமூக சேவகர் படுகொலை:பட்டப்பகலில் திருவண்ணாமலையில் பயங்கரம்
ஜூலை 03,2012 தினமலர்
திருவண்ணாமலை: பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, சமூக சேவகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக கொலையாளி இருவர், நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் எதிரே வசிப்பவர் ராஜ்மோகன் சந்திரா(53), இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
சமூகசேவை:பொறியியல் பட்டதாரியான ராஜ்மோகன், பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் இணைந்து சமூக சேவை செய்து வந்தார். இவர் ஏராளமான பொதுநல வழக்குகளை போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இவர் பூனைகளை செல்லமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர், வீட்டில் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனத்தை சேர்ந்த, 20 பூனைகளை தன் குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பூனைகளுக்கு பால் வாங்க அருகே உள்ள பால் பூத்திற்கு ராஜ்மோகன் சந்திரா, தன் மொபட்டில் சென்றார். பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
முன்விரோதம்:
பல்வேறு போலீஸார், வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் மீது இவர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சந்திரசேகரன்(29), வட ஆண்டாப்பட்டை சேர்ந்த முருகன்(32), ஆகியோர், கொலை செய்ததை ஒப்புகொண்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment