சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 13, 2012

அண்ணனின் மனைவியும் மருமகள்தான்

எதையும் செய்வாள் கலியுக மருமகள் என்பதற்கு இந்த செய்தி!


தேவகோட்டை:தோஷம் கழிக்கச் சென்று, நாத்தனாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக, அண்ணி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிவகங்கை, தேவகோட்டை பூதுக்குடியைச் சேர்ந்தவர் பாக்கியம்,23. இவருக்கு, ஜூன் 29ல், திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஜூன் 17ல் மாயமானார். தங்கையை காணவில்லை என, மாரிமுத்து, போலீசில் புகார் செய்தார்.நேற்று முன்தினம், வயல்வெளியில் மண்டை ஓடு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அருகில், முட்புதரில் ரத்தக்கறை படிந்த கல், சுரிதார் கிடந்தது. ராமநாதபுரம் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, இறந்தது பாக்கியம் என கண்டுபிடித்தனர்.

மாரிமுத்து மனைவி திருச்செல்வியின் நடவடிக்கை, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மோப்ப நாயும், சம்பவ இடத்திலிருந்து மாரிமுத்துவின் வீட்டுக்குள் சென்றது. திருச்செல்வியிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், திருச்செல்வி அளித்த வாக்குமூலம்: பாக்கியத்தின் திருமணத்திற்காக, என் கணவர் நகைகளை கேட்டார்; தர மறுத்தேன். நிலங்களை விற்கப் போவதாக கூறினார். நிலத்தை விற்று விட்டால், என் இரண்டு மகள்களுக்கும் என்ன செய்வது என்று கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. "தங்கை திருமணம் தான் முக்கியம்' என்றார். எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கு, "ஜோதிடர் தோஷம் கழிக்கச் சொல்லியிருக்கிறார். வீடு அருகே கிடக்கும் கல்லை எடுத்து வா' என, பாக்கியத்திடம் கூறினேன். பாக்கியத்தின் தலையில் கல்லைத் தூக்கி வரச் செய்து, வயல் வெளிக்கு அழைத்துச் சென்றேன். கண் மூடி வழிபடச் சொன்னேன். அப்போது, கல்லை தலையில் போட்டு, கொலை செய்தேன்.
தங்கை மாயம் குறித்து, போலீசில் புகார் செய்யப் போவதாக, கணவர் கூறினார். வேண்டாம் என தடுத்தேன். மூன்று நாள் கழித்து, புகார் கொடுத்து விட்டார். எப்படியும் சிக்கி விடுவோம் என எண்ணி, கொலையை ஒப்புக் கொண்டேன்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.