இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 09, 2012

இந்தியாவில் இருக்கும் இரண்டு விதமான பெண்கள்

கீழே உள்ள இரண்டு படங்களும் இன்று ஒரே செய்தித்தாளில் வந்தவை.


மிஸ் காட்டன் சிட்டி: கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நேற்று, மிஸ் காட்டன் சிட்டி கலை விழா நடந்தது. (தினமலர் 10 ஜூலை 2012)


“பெண்ணுரிமை” என்று பல காலமாக கூப்பாடு போடும் கூட்டம் யாருக்காக, எதற்காக, எப்படிப்பட்ட உரிமைக்காக போராடுகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம். இந்த பெண்ணியவாதிகள் பெண்களை இரண்டாக தரம் பிரித்து மேல்தட்டு வர்கத்திற்கு மட்டுமே குரல் கொடுப்பார்கள்.




1. மேல்தட்டுப் பெண்கள் - விருப்பம்போல வாழலாம், ‘பப்’புகளுக்குச் சென்று குடித்து கூத்தடிக்கலாம், ஃபேஸ் புக்கில் ஆண் நண்பனை தேர்வு செய்து சட்டத்தின் துணையோடு கணவனை விரட்டியடிக்கலாம், ஆண் நண்பருடன் விருப்பம்போல சுத்தலாம். தட்டிக் கேட்கும் கணவனை குடும்பத்தோடு பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று கூலிப்படை வைத்து கணவனை போட்டுத் தள்ளலாம். இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் இதுபோன்ற பெண்களை மட்டும்தான் அப்பாவிப் பெண்களாகக் கருதி பாதுகாக்கும். இதுபோன்ற உரிமைகளுக்காகப் குரல் கொடுப்பதுதான் இப்போதைய “பெண்ணுரிமை” போராட்டம்!

2. கீழ்தட்டுப் பெண்கள் - இவர்களை யாரும் இதுவரை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. மதிக்கப்போவதுமில்லை. சமூகத்தின் கீழ் நிலையில் இருக்கும் பெண்களை யாரும் மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சட்டங்களை தவறாகப் பயன்படுத்தத் தெரியாது. குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளை பேணிக்காக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவையெல்லாம் இருந்தால் இவர்களால் எப்படி பொய் வழக்குப்போட்டு போலி பெண்ணியம் பேசுபவர்களுக்கு வருமானம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்? அதனால்தான் இந்தியாவில் இரண்டுவித நிலைகளில் பெண்களை வைத்திருக்கிறார்கள்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.