
========
இந்தியாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சகம் இருக்கிறது. தேசிய மனித உரிமை கழகம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாரியம் இருக்கிறது. மாநில மனித உரிமை கழகம் இருக்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் சமூகத்தில் ஏழ்மையில் வாழும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் என்ன பயன்?
இந்த நலவாரியங்கள் எல்லாம் கள்ளக்காமத்தில் ஈடுபடும் மேல்தட்டுப் பெண்கள் தங்கள் கணவனை ஒடுக்குவதற்கு வசதியாக பொய் வரதட்சணை வழக்குகளை போடுவதற்கு மட்டும்தான் "பெண்ணுரிமை" என்ற பெயரில் குரல் கொடுப்பார்களோ?
மேற்கத்திய நாடுகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அவலநிலை தொடர்கிறது. இதுபோன்ற வேலைகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல் கிடையாதா? அல்லது வறுமையில் வாடும் இந்தியர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லையா? ஏன் இந்த அவலம்? சக இந்தியர்களை மனிதர்களாகவே மதிக்காத நாடு ஏவுகனைகளை மட்டும் செலுத்தி வல்லரசாகிவிட்டோம் என்று பெருமை கொள்ள முடியுமா?
சென்னை போன்ற பெருநகரத்திலேயே இந்த நிலை என்றால் கிராமப்புறங்களில் மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்?
No comments:
Post a Comment