சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, May 12, 2012

கணவனை பழிவாங்க புது வழி கண்டுபிடிக்கும் மனைவியர்

இந்தியாவில் திருமணம் செய்து அது கசந்துபோகும்போதோ அல்லது மனைவியின் கள்ளக்காதலை கணவன் கண்டுபிடிக்கும்போதோ கணவனை பழிவாங்க மருமகள் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது. எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள் என்று இவர்களை பாராட்டத் தோன்றுகிறது!

இதுபோன்ற புத்திசாலி மருமகள்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வழிமுறை “வரதட்சணை தடுப்புச் சட்டம்”.

வரதட்சணை இல்லாத திருமணமாக இருந்தாலும் கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் கொடுப்பது. இந்த சட்டத்தில் மருமகள் சொல்வது அத்தனையும் உண்மை என்று கருதப்படுவதால் மருமகள் இந்தப் புகார் கொடுத்தவுடன் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் அரசாங்கம் சங்கு ஊதிவிடும். பெரும்பாலான மருமகள்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் சக்திமிகு ஆயுதம் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act).

இந்த வழிமுறையை பயன்படுத்தி கணவனை பழிவாங்கி சலித்துப்போய்விட்டதால் இப்போது காலத்தின் மாற்றத்திற்கேற்ப “சைபர்” டெக்னிக்கை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியில் பாருங்கள் கணவனை பழிவாங்க அவனது மொபைல் போன், பெயரை பயன்படுத்தி ஈமெயில் மூலம் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் ஒரு மனைவி. நல்ல முன்னேற்றம்!


ஸ்ரீவில்லிபுத்தூர்: கணவரை சிக்க வைக்க, "இ-மெயில்' மூலம் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, பல்கலை பெண் ஊழியரை, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மிரட்டல் : விருதுநகர் எஸ்.பி., அலுவலகம், சென்னை ஆயுதப்படை அலுவலகத்துக்கு, கடந்த 9ம் தேதி இரவு 10.30 மணிக்கு, "இ-மெயில்' மூலம், "முதல்வர் ஜெயலலிதா வீடு, மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்' என, மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முதல்வர் செல்லும் வழித்தடங்கள், அவரது வீடு, மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், பல்கலை விடுதி கணக்கராக பணிபுரியும், பி.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த வசந்தா அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த சைபர் கிரைம் போலீசார், மெயில் அனுப்பிய கம்ப்யூட்டரை பறிமுதல் செய்து, வசந்தாவை கைது செய்தனர்.

3 பிரிவுகளில் வழக்கு பதிவு : டி.எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: கிருஷ்ணன்கோவில் அருகே, சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி வசந்தாவுக்கும், பி.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சி., பட்டதாரி நாச்சிமுத்துவிற்கும், 2010 ஏப்ரலில் திருமணம் நடந்தது. தானேவில் மெடிக்கல் கம்பெனியில் வேலை பார்த்த நாச்சிமுத்து, மனைவியை உடன் அழைத்துச் சென்று, நண்பர் அறையில் தங்கினார். தனி வீடு பார்த்து தங்க வைக்குமாறு மனைவி வற்புறுத்தினார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாய்வீட்டிற்கு வசந்தா வந்து விட்டார். 2011 மே மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிக்கவும், செலவுக்கும், கணவர் பணம் தரவில்லை. பல்கலையில், 4,000 ரூபாய் சம்பளத்தில் கணக்கராக வசந்தா வேலை பார்த்தார். சிரமப்பட்ட அவர், கணவரை பழிவாங்கும் நோக்கில், அவரது பெயர், மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, இ-மெயில் அனுப்பினார்.இதையடுத்து, அவர் மீது இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுப்பது, அரசியல் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வழிபாட்டு தலங்களில் வகுப்பு வாத பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்டப் பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

மேலும் ஒருவர் கைது : ஸ்ரீவில்லிபுத்தூர்: முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் ஒரு பல்கலை.,ஊழியர் கைது செய்யப்பட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆண்டாள்கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த 9ம் தேதி இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பல்கலை பெண் ஊழியர் வசந்தா,28, கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இ- மெயில் அனுப்புவதற்கு உதவியாக இருந்ததாக அதே பல்கலையில் கிளார்க்காக பணி புரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவை சேர்ந்த லட்சுமணனை நேற்று இரவு கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் ஸ்ரீவி.,மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கவிதா மிரட்டல் விடுத்த இருவரையும் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார். இதில் வசந்தியை திருச்சியிலும், லட்சுமணனை மதுரை சிறையிலும் அடைத்தனர்.


2 comments:

ganabathy said...

அருமையான பதிவு.

ganabathy said...

அருமையான பதிவு.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.