சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, May 20, 2012

வரதட்சணை வழக்கு என்றால் போலிஸுக்குத்தான் கொண்டாட்டம்!

வரதட்சணை வழக்கு என்றாலே காவலுக்கும் நீதிக்கும் கொண்டாட்டம்தான். அது உண்மையான வழக்காக இருந்தாலும் சரி, பொய் வழக்கானாலும் சரி இரண்டிலும் பலருக்கு வருமானம் இருக்கிறது. இல்லையென்றால் 1961-ல் வந்த சட்டத்தை இன்றுவரை சரியாக நடைமுறைப்படுத்தாமல் வைத்திருப்பார்களா!!

வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம். ஆனால் இதுவரை வரதட்சணை கொடுத்தவர்களை இந்த சட்டம் தண்டித்ததே இல்லை. இந்த சட்டத்தை சரியாக செயல்படுத்தினால் இதுபோன்ற வழக்குகள் குறைந்து பிறகு வருமானம் போய்விடுமே என்ற காரணமும் இருக்கலாம்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இதுபோன்ற வரதட்சணை வழக்குகளில் லஞ்சம் பெறும் போலிஸை தற்காலிகமாக பணி நீக்கம் செய்வார்கள். அந்த சமயத்தில் பாதி சம்பளம் கிடைக்கும். இது எப்படி இருக்கு? பிறகு கொஞ்ச நாளில் வழக்கு “சரி செய்யப்பட்டு” வேறு ஊருக்கு மாற்றல் செய்து தொழிலை வழக்கம் போல நடத்த வசதியும் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரதட்சணைக் கொடுமைகளும் ஒழியாது அதனோடு தொடர்புடைய பொய் வழக்குகளும், லஞ்ச ஊழல்களையும் ஒழிக்க முடியாது.

வரதட்சணை வழக்கில் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

மே 21,2012 தினமலர்

மதுரை:மதுரையில், வரதட்சணை இறப்பு வழக்கில் இருந்து மாமியாரை விடுவிக்க, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., மற்றும் இரு ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் மனைவி சமீபத்தில் "ஸ்டவ் வெடித்து' இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக, கார்த்திகேயன் மாமியார், டி.எஸ்.பி., ராஜனிடம் புகார் செய்தார். விசாரணை நடத்திய அவர், வரதட்சணை கொடுமையால் இறந்ததாக வழக்கு பதிவு செய்ய, பெண் எஸ்.ஐ., சத்யாவுக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் இருந்து, கார்த்திகேயன் தாயார் ருக்மணியை விடுவிக்க, எஸ்.ஐ., சத்யா மற்றும் ஏட்டுகள் கருணாகரன், கண்ணன் ஆகியோர், 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் விசாரணையில், உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மூவரையும் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் சஸ்பெண்ட் செய்தார்.

இரு நாட்களுக்கு முன்தான், சத்யா திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். அங்கு செல்ல தயாரான நிலையில், இடமாறுதல் உத்தரவை தற்காலிகமாக ஆஸ்ராகர்க் நிறுத்தி வைத்து, சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.