இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, May 05, 2012

தனிக் குடித்தனம் வர மறுத்த கணவனுக்கு கத்திக் குத்து கொடுத்த மனைவி

கூட்டுக் குடும்பம் ஒழிந்துவிட்டது. இப்போது கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்தாலே அதுதான் கூட்டுக் குடும்பம் என்று சொல்லும் நிலை நாட்டில் நிலவி வருகிறது என்று அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில் திருமணமான பிறகு வயதான பெற்றோரை தனது கணவன் வீட்டை விட்டு விரட்டவேண்டும் அல்லது அவர்களை பராமரிக்கக்கூடாது அவர்களை விட்டு தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மருமகள்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிடிவாதத்திற்கு பல முதுகெலும்பில்லாத கோழைகள் அடிபணிந்து தங்களது பெற்றோரை விரட்டுவதால்தான் நாட்டில் பல முதியோர் இல்லங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தக் கொடுமைகள் உச்சகட்டம் அடைந்துவிட்டதால் தமிழக அரசு 2007ல் வயதான பெற்றோர்களை காக்க புதிய சட்டமே இயற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இதுபோல மருமகள்களின் கட்டளைக்கு அடிபணியாமல் பெற்றோரை பராமரிக்க நினைக்கும் கணவன்களையும் அவர்களது குடும்பத்தாரையும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் பல மருமகள்கள் மிரட்டி வருகிறார்கள் என்பது காவல்துறையும், நீதித்துறையும் நன்கு அறிந்த உண்மை. ஆனால் அவர்கள் அந்த உண்மையை மறைத்து அப்பாவிக் கணவன்களையும், வயதான பெற்றோர்களையும் பொய் வழக்குகள் மூலம் துன்புறுத்தி இதுபோன்ற பொய் வழக்கு போடும் மருமகள்களை ஊக்குவித்து வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

இதன் உச்சகட்டமாக இப்போது மருமகள்கள் தங்களின் சொல்லுக்கு கட்டுப்படாத கணவனை கொலை செய்யும் அளவிற்கு இறங்கிவிட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அதுதான் இன்றைய செய்தி.

கணவனை கத்தியால் குத்திய மனைவிக்கு வலை

மே 06,2012 தினமலர்
Link
மறைமலைநகர்: கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில், கணவனை கத்தியால் குத்திய மனைவி மற்றும் மாமனாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவர்த்தனம். இவரது மனைவி மோகனகுமாரி,50, இவர்களின் மகன் கார்த்திக்,22, எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டின் அருகில், தாம்பரத்தில் போக்குவரத்து காவலராகப் பணிபுரியும் மனோகரன், 45, தனது மனைவி மற்றும் மகள் சங்கீதா,19, உடன் வசித்து வந்தார்.கார்த்திக், எட்டு மாதங்களுக்கு முன், சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறிது நாட்கள் கழித்து, கார்த்திக்கை வீட்டோடு மாப்பிள்ளையாக வரும்படி, மனைவி சங்கீதா, மாமனார் மனோகரன் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு கார்த்திக் சம்மதிக்க வில்லை.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கார்த்திக், ஆத்திரத்தில் மனைவி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.கோபமடைந்த சங்கீதா, தனது தந்தை மனோகரன், தாய் சண்முகசுந்தரி ஆகியோரை வீட்டிற்கு வரவழைத்து, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு முற்றியதில், சங்கீதா, கையில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால், கார்த்திக்கின் வயிற்றில் குத்தினார்.தடுக்க முயன்ற கார்த்திக்கின் தாயார் மோகனகுமாரியை, சங்கீதாவின் பெற்றோர், உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக, காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.கூடுவாஞ்சேரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

1 comment:

Unknown said...

தங்களது உன்னதமான சமூகப்பணிக்கு எனது பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.