சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, May 05, 2012

விவாகரத்தும் குடும்பக் கொலைகளும்

நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சம்பங்கள்.... ஆனால் செய்தியிலுள்ள இரு குழந்தைகளின் நிலையைப் பற்றி கவலைப்பட ஒருவர்கூட இல்லை இந்த நாட்டில். இதுபோல பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம்????

மனைவி கொலை கணவன் தலைமறைவு

மே 06,2012 தினமலர்

ஈரோடு: மனைவியை குத்தி கொலை செய்த, கறிக்கடை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஈரோடு, சூரம்பட்டி எஸ்.கே.சி. ரோடு, பி.வி.திருமண மண்டப சந்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40); கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்தேஸ்வரி (35).சித்தேஸ்வரி ஏற்கனவே திருமணமாகி, முதல் கணவரை விவாகரத்து செய்தவர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஓராண்டுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்தார். இதனிடையே, செந்தில்குமாருடன் ஏற்பட்ட தகராறில், அவரை விட்டு பிரிந்து, சேலத்தில் வசித்தார். சேலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், செந்தில்குமார் மீது புகார் கொடுத்தார். நேற்று சூரம்பட்டியில் உள்ள வீட்டில் பொருட்களை எடுத்துச் செல்ல சித்தேஸ்வரி வந்தார். அப்போது கத்தியால் குத்தப்பட்ட சித்தேஸ்வரி பரிதாபமாக இறந்தார். செந்தில்குமார் தலைமறைவானார். அவரை சூரம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.
====
மேலே செய்தியில் உள்ளது போன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்பதை காட்டும் முந்தைய செய்தி... ... இரண்டாவது கணவனை தேடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு1 comment:

ganabathy said...

தங்களது உன்னதமான சமூகப்பணிக்கு எனது பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.