இந்திய கள்ளக்காதல் சட்டப்படி தவறு செய்யும் மனைவி குற்றவாளி கிடையாது. ஆனால் பின்வரும் செய்தியில் ஒரு கணவர் இந்த விஷயம் தெரியாமல் சோரம் போன மனைவி திருந்துவாள் என்று தனது வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கணவரின் செய்கை சமூகத்தின் பார்வைக்கு ஒரு வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் கணவன் தனது மனைவியை தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டால் அந்த மனைவி கணவன் வீட்டு முன் தர்ணா என்று செய்தி வெளியிட்டால் அது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை என்று மக்கள் பேசுவார்கள். விந்தையான சமுதாயம்.
இந்தக் கணவரின் செய்கை சமூகத்தின் பார்வைக்கு ஒரு வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் கணவன் தனது மனைவியை தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டால் அந்த மனைவி கணவன் வீட்டு முன் தர்ணா என்று செய்தி வெளியிட்டால் அது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை என்று மக்கள் பேசுவார்கள். விந்தையான சமுதாயம்.
டிசம்பர் 20,2012 தினமலர்
லக்னோ:உத்தர பிரதேசத்தில், "சோரம் போன மனைவி, மனம் திருந்தி வரும் வரை, செய்த தவறுகளுக்காக அவள் மன்னிப்பு கேட்கும் வரை, மரத்திலிருந்து இறங்க மாட்டேன்' என, ஒன்பது மாதங்களாக, கணவர் ஒருவர், மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்.
வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள், வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பிய சஞ்சய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருப்பதை கண்டார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவர், மனைவியை கண்டித்தார். தாராவுடன் வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் இணக்கமான உறவு இல்லை. மும்பை வாலிபர் நினைவாகவே, தாரா இருந்துள்ளாள்.இதனால், அந்த பெண்ணை, அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி தாரா மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார். எனினும், அந்த மும்பை இளைஞனை மறக்க முடியாமல் தாரா தவித்தாள்.இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. உணவு, உறக்கம் எல்லாம் மரத்தில் தான்.இந்த தகவல் அறிந்து, சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர்.
அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. வலுக்கட்டாயமாக யாராவது இறக்க முயன்றால், "மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார்.ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்வதும், பிறகு ஏறி உட்கார்ந்து கொள்வதுமாக, ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை; போராட்டம் நடத்தும் கணவன் சஞ்சயை சமாதானப்படுத்தவோ, மும்பை வாலிபனை மறக்கவோ இயலாமல், தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள். இதனால், சஞ்சயின் மர போராட்டம் தொடர்கிறது.
No comments:
Post a Comment